IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணி கடும் ரன் ரேட் அழுத்தத்துக்கு நடுவே ஆடிய போதும் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு நொடி கூட மன உறுதியை இழக்காமல் ஒரு போர் வீரனைப் போல நின்று ஆடி லக்னோ அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

அவர் 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். இதுவே அவரது முதல் ஐபிஎல் சதம் ஆகும். மேலும், முதல் ஓவரிலேயே களத்துக்கு வந்த அவர் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் அசாதாரணமாக ஒரு சிக்ஸ், 3 ஃபோர் அடித்தார்.
முன்னதாக இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்களும், சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்களும் குவித்தனர். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 210 ரன்கள் குவித்தது. இந்த ஸ்கோர் போதுமனதகாவே அனைவரும் எண்ணினர்.
லக்னோ அணி சேஸிங்கில் 88 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது களத்தில் இருந்த மார்கஸ் ஸ்டோனிஸ் ஒட்டுமொத்த போட்டியையும் தன் தோளில் சுமந்தார். அதன் பின் வந்த தேவ்தத் படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து கடும் அழுத்தத்தை ஏற்படுத்தினார். பின்னர் நிக்கோலஸ் பூரன் 15 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார்.
மறுபுறம் மார்கஸ் ஸ்டோனிஸ் அபார ஆட்டம் ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து அசத்தினார். கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முஸ்தாபிசூர் ரஹ்மான் வீசிய ஓவரில் எளிதகன் நான்கு பவுண்டரிகள் அடித்து வெற்றியை உறுதி செய்தார் ஸ்டோனிஸ். இதை அடுத்து லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது


Click it and Unblock the Notifications