சென்னை : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்தார். அதன் மூலம் சிஎஸ்கே அணியின் கேப்டனாக மாபெரும் சாதனை படைத்தார். சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் அதிக ரன் அடித்த சாதனையை முறியடித்தார்.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது அஜின்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஒரு பக்கம் விக்கெட்கள் வீழ்ந்த போதும் ருதுராஜ் கெய்க்வாட் நிலையாக நின்று அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 60 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார்.

இது அவரது இரண்டாவது ஐபிஎல் சதம் ஆகும். மேலும், சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின் அவர் அடிக்கும் முதல் சதம் ஆகும். இதற்கு சிஎஸ்கே அணியின் கேப்டன்களாக தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருந்துள்ளனர். அவர்களில் தோனி 84 ரன்கள் அடித்ததே சிஎஸ்கே கேப்டன் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். அந்த சாதனையை முறியடித்து 108 ரன்கள் குவித்து இருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்.
மேலும், சிஎஸ்கே அணிக்காக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோருக்கு பின் இரண்டு சதம் அடித்த சிஎஸ்கே வீரர் என்ற பெருமையை பெற்றார் ருதுராஜ் கெய்க்வாட். மேலும், முதல் சதம் அடித்த சிஎஸ்கே கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார் ருதுராஜ் கெய்க்வாட்.
CSK vs LSG : சிஎஸ்கே மெகா ரெக்கார்டு.. டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனை.. ஐபிஎல் தொடரில் நம்பர் 1 இடம்
இந்தப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்., நான்காவது விக்கெட்டுக்கு ருதுராஜ் - சிவம் துபே ஜோடி 104 ரன்கள் குவித்தது. அதன் மூலம் சிஎஸ்கே அணிக்காக நான்கு அல்லது அதற்கு கீழே உள்ள விக்கெட்களுக்கு 100 ரன்களுக்கும் மேல் கூட்டணியாக ரன் குவித்த ஜோடிகள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தனர்.