Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs MI : பிராவோ இல்லை.. ரெய்னாவுக்கு பதில் தோனி இறக்கிய வீரர்.. சிஎஸ்கே அணியில் ட்விஸ்ட்

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

முதல் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணியில் டிவைன் பிராவோ இடம் பெறவில்லை. முரளி விஜய் அணியில் இடம் பெற்றார்.

முதல் போட்டி

முதல் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் இரு அணிகளும் எந்த வீரர்களை களமிறக்கப் போகிறது என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. சிஎஸ்கே அணியில் எதிர்பாராத சில விஷயங்களை செய்துள்ளார் தோனி.

டாஸ்

டாஸ்

முதல் போட்டி அபுதாபியில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்றது. கேப்டன் தோனி டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்தார். போட்டியின் இரண்டாவது பகுதியில் காற்றில் ஈரப்பதம் காரணமாக பந்துவீசுவதில் சிக்கல் இருக்கும் என்பதால் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பிராவோ இல்லை

பிராவோ இல்லை

சிஎஸ்கே அணியில் ஆல் - ரவுண்டர் பிராவோ தேர்வு செய்யப்படவில்லை. அதே போல இம்ரான் தாஹிரும் இடம் பெறவில்லை. இருவருக்கும் காயம் அல்லது முழு உடற்தகுதி இல்லை என கூறப்படுகிறது. பிராவோ அணியில் இடம் பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ரெய்னாவுக்கு பதில்..

ரெய்னாவுக்கு பதில்..

ரெய்னாவுக்கு பதில் முரளி விஜய் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஷேன் வாட்சனுடன் துவக்க வீரராக களமிறங்க உள்ளார். பாப் டுபிளெசிஸ் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய உள்ளார். அடுத்து ராயுடு, தோனி, ஜடேஜா பேட்டிங் வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.

சாம் கர்ரன்

சாம் கர்ரன்

இங்கிலாந்து ஆல் - ரவுண்டர் சாம் கர்ரன் அணியில் இடம் பெற்றுள்ளார். இதை பலரும் எதிர்பார்க்கவில்லை. அவர் இரு நாட்கள் முன்பு தான் இங்கிலாந்தில் இருந்து வந்தார். எனினும் அவரை அணியில் தேர்வு செய்து ஆச்சரியம் அளித்துள்ளார் தோனி.

பந்துவீச்சு

பந்துவீச்சு

ஆல் ரவுண்டர்கள் ஜடேஜா, சாம் கர்ரன் உடன் தீபக் சாஹர், பியுஷ் சாவ்லா, லுங்கி நிகிடி பந்துவீச உள்ளனர். மும்பை அணி முழு பலத்துடன் களமிறங்கி உள்ளது. ரோஹித் சர்மா, பாண்டியா சகோதரர்கள், பொல்லார்டு, பும்ரா, பாட்டின்சன், ட்ரென்ட் போல்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் - ஷேன் வாட்சன், முரளி விஜய், பாப் டுபிளெசிஸ், அம்பதி ராயுடு, தோனி (கேப்டன் - விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், தீபக் சாஹர், பியுஷ் சாவ்லா, லுங்கி நிகிடி.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் - ரோஹித் சர்மா (கேப்டன்), க்வின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சௌரப் திவாரி, க்ருனால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்டு, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரென்ட் போல்ட், பும்ரா

Story first published: Saturday, September 19, 2020, 20:10 [IST]
Other articles published on Sep 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+