சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 140 ரன்கள் கூட எடுக்காது என நினைத்திருந்த நிலையில் தீபக் சாஹர் கடைசி இரண்டு ஓவர்களில் ஆடிய ஆட்டத்தால் அந்த அணி 155 ரன்கள் எடுத்தது.
நீண்ட காலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று வந்த தீபக் சாஹர் இந்த ஆண்டுதான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார். 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி போட்டி போட்டு வாங்கி இருந்தது. இந்த நிலையில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார்.

அதுவும் தனது பேட்டிங் மூலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே அந்த அணி விக்கெட்டுகளை இழந்து வந்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும், திலக் வர்மா 31 ரன்களும் எடுத்து இருந்தனர்.
சரியாக 18 வது ஓவரின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது தீபக் சாஹர் மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆடி வந்தனர். அவர்களை எப்படியும் அதிக ரன் அடிக்க விடாமல் தடுத்துவிடலாம் என நினைத்தது சிஎஸ்கே அணி.
ஆனால், தீபக் சாஹர் கலீல் அகமது வீசிய 19வது ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் 13 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த ஓவரின் முடிவில் ட்ரெண்ட் போல்ட் ஆட்டம் இழந்தார். 9 விக்கெட்கள் இழந்த நிலையில் கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக ரன்கள் எடுக்காது என்று ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால், கடைசி ஓவரிலும் தீபக் சாஹர் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 14 ரன்கள் எடுத்தது. தீபக் சாஹர் 15 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக ரன் குவித்த மூன்றாவது வீரராக இருந்தார்.
இதை அடுத்து 140 ரன்கள் கூட எட்டாது என கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியில் நூர் அகமது நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். கலீல் அகமது மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். அஸ்வின் மற்றும் நாதன் எல்லிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. பந்து வீச்சில் தீபக் சாஹர் பந்து வீச்சில் 2 ஓவர்கள் மட்டும் வீசி 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். சிஎஸ்கே அணி வென்றதால் அவரது அதிரடி பேட்டிங் வீணானது.
0.12 வினாடி.. தோனி செய்ததை பார்த்து அரண்டு போன சூர்யகுமார் யாதவ்.. 43 வயதில் என்ன ஸ்டம்பிங்!
செய்தி சுருக்கம்: