Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிழிஞ்சது லுங்கி.. 3 விக்கெட் எடுத்தாலும் அடுத்த மேட்ச்சில் சான்ஸ் கொடுப்பாரா தோனி? பரபரப்பு!

அபுதாபி : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல் துவங்கி விட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த போது சிஎஸ்கே வீரர் ஒருவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

அவரது காயம் மோசமாக இருந்தால் அடுத்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது.

முதல் போட்டி

முதல் போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே ஆன முதல் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி என்பதால் இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

டாஸ்

டாஸ்

முதல் போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்றது. கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். தீபக் சாஹர் முதல் ஓவரை வீசினார். மும்பை இந்தியன்ஸ் அணி துவக்கத்தில் அதிரடியாக ரன் சேர்த்தது. எனினும், பின்னர் விக்கெட் சரிவில் சிக்கியது.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

ரோஹித் சர்மா 12, டி காக் 33, சூர்யகுமார் யாதவ் 17, திவாரி 42, ஹர்திக் பாண்டியா 14, கீரான் பொல்லார்டு 18, க்ருனால் பாண்டியா 3 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர். விக்கெட் வீழ்ச்சி இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி ரன் குவித்தது.

நிகிடி காயம்

நிகிடி காயம்

பந்துவீச்சின் போது 13வது ஓவரை வீசிய சிஎஸ்கே அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி கடைசி பந்தை வீசும் போது காயம் அடைந்தார். அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அவருக்கு பாதிப்பு இருந்தாலும் மீண்டும் வந்து பந்து வீசினார்.

3 விக்கெட்

3 விக்கெட்

முதல் இரண்டு ஓவர்கள் வீசிய வரை விக்கெட் வீழ்த்தாத அவர், காயம் ஏற்பட்ட பின் வீசிய இரண்டு ஓவர்களில் 3 விக்கெட் வீழ்த்தி மிரள வைத்தார். பொல்லார்டு, க்ருனால் பாண்டியா, பாட்டின்சன் என மிடில் ஆர்டரின் கடைசி பேட்ஸ்மேன்களை காலி செய்து அசத்தினார்.

தோனி என்ன செய்வார்?

தோனி என்ன செய்வார்?

3 விக்கெட் வீழ்த்தினாலும் அவரது காயம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரியவில்லை. கேப்டன் தோனி அடுத்த போட்டியில் லுங்கி நிகிடியை அணியில் தேர்வு செய்யாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது சிஎஸ்கே அணியின் அணித் தேர்வில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

அடுத்த போட்டி

அடுத்த போட்டி

சிஎஸ்கே அணி 22ஆம் தேதி அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்க உள்ளது. அந்தப் போட்டியில் லுங்கி நிகிடியை தோனி தேர்வு செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நிகிடி தேர்வு செய்யப்படவில்லை என்றால் தாஹிர் அல்லது ஷர்துல் தாக்குர் அணியில் இடம் பெறுவர்.

Story first published: Saturday, September 19, 2020, 22:57 [IST]
Other articles published on Sep 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+