Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs MI : 2020 ஐபிஎல் ஆரம்பம்.. எப்போது துவங்கும்? ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியுமா? முழு தகவல்கள்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடர் இன்று (செப்டம்பர் 19) அன்று அபுதாபியில் துவங்க உள்ளது.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

சுமார் ஐந்து மாதம் தாமதமாக நடக்க உள்ள ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக துவங்க உள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

இப்படி ஒரு ஐபிஎல் தொடர் இதுவரை நடந்ததே இல்லை. கடும் கட்டுப்பாடுகளுடன், ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது. 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் இறுதியில் துவங்க இருந்த ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் 2020 டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட்டதால் அந்த தொடர் நடக்க இருந்த அக்டோபர் மாதம் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

ஐபிஎல் திட்டம்

ஐபிஎல் திட்டம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்தவும், செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் தொடர் நடைபெறும் வகையில் அட்டவணையையும் தயார் செய்தது பிசிசிஐ. எட்டு ஐபிஎல் அணிகளும் ஆகஸ்ட் 20, 21 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டுள்ளன.

வீரர்களுக்கு கொரோனா

வீரர்களுக்கு கொரோனா

முதல் வார குவாரன்டைன் முடிவில் சிஎஸ்கே அணியில் இரு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதில் ஒருவர் குணமடைந்துள்ளார். இந்த நிகழ்வால் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படும் என்ற பேச்சு கூட எழுந்தது. எனினும், பிசிசிஐ அனைத்தையும் சமாளித்துள்ளது.

ஐபிஎல் தொடர் துவக்கம்

ஐபிஎல் தொடர் துவக்கம்

இந்த நிலையில், திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 அன்று அபுதாபியில் துவங்க உள்ளது. முதல் போட்டியில் கடந்த சீசன் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், அதற்கு முந்தைய சீசன் சாம்பியன் சிஎஸ்கே அணியும் மோத உள்ளன.

மும்பை - சிஎஸ்கே

மும்பை - சிஎஸ்கே

சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடக்கும் போட்டிகளுக்கு எப்போதும் கடும் எதிர்பார்ப்பு நிலவும். இந்த இரண்டு அணிகளுக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்பதால் ரசிகர்கள் இணையத்தில் மோதிக் கொள்ளும் நிகழ்வுகளும் நடக்கும்.

துவக்க விழா இல்லை

துவக்க விழா இல்லை

இந்த முறை ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் தான் போட்டிகள் நடைபெற உள்ளன. அதனால், ஐபிஎல் துவக்க விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளி நபர்கள் யாரையும் மைதானத்திற்கு உள்ளே அனுமதிக்க முடியாது என்பதும் இதற்கு முக்கிய காரணம்.

எத்தனை மணிக்கு போட்டி துவங்கும்?

எத்தனை மணிக்கு போட்டி துவங்கும்?

சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இடையே ஆன முதல் போட்டி சரியாக இரவு 7.30 மணிக்கு துவங்கும். டாஸ் நிகழ்வு அதற்கு அரை மணி நேரம் முன்பு 7.00 மணிக்கு டாஸ் போடப்படும். இந்தப் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பாகும்.

எந்த சானலில் பார்க்கலாம்?

எந்த சானலில் பார்க்கலாம்?

ரசிகர்கள் மைதானத்துக்குள் செல்ல அனுமதி இல்லை எனும் நிலையில் தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை இந்த முறை அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்ளிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சானல்களில் முதல் ஐபிஎல் போட்டியை இலவசமாக காணலாம்.

போனில் பார்ப்பது எப்படி?

போனில் பார்ப்பது எப்படி?

ஸ்மார்ட்பபோனில் அல்லது இணையத்தில் ஐபிஎல் தொடரை பார்க்க விரும்புபவர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலி அல்லது ஹாட்ஸ்டார் இணையதளத்தில் போட்டிகளை காணலாம். ஆனால், ஹாட்ஸ்டார் சந்தாதாரர்கள் மட்டுமே இந்த ஐபிஎல் சீசனை காண முடியும்.

எவ்வளவு கட்டணம்?

எவ்வளவு கட்டணம்?

ஹாட்ஸ்டார் விஐபி வருட சந்தா ரூ.399 அல்லது ஹாட்ஸ்டார் ப்ரீமியம் வருட வந்தா ரூ.1499 செலுத்தியவர்கள் மட்டுமே ஹாட்ஸ்டாரில் போட்டிகளை காண முடியும். எனினும், தொலைக்காட்சியில் பார்க்க எந்த கட்டணமும் இல்லை.

Story first published: Saturday, September 19, 2020, 13:47 [IST]
Other articles published on Sep 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+