Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs MI: "வெறும் பிளாஸ்டிக் கேப்டன்.. என்ன நம்பர் இது?".. பாண்டியாவை வெளுத்து வாங்கிய ஸ்ரீகாந்த்

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் இரண்டாவது முறையாக படுதோல்வி அடைந்தது. அதன் பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட ஆட்டம் மற்றும் கேப்டனுக்கான தலைமைப் பண்பு குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழுத் தலைவரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஹர்திக் பாண்டியாவை மிகவும் கடுமையாகச் சாடியுள்ளார். "ஹர்திக் பாண்டியா ஒரு பிளாஸ்டிக் கேப்டன்" என்று அவர் விமர்சித்தது சமூக வலைதளங்களில் சலசலப்பை கிளப்பியுள்ளது.

கடந்த மே 2 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. திலக் வர்மா ஆட்டமிழந்த பிறகு, 6-வது வீரராக ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அப்போது நமன் திர் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார். ஆனால், கேப்டனாகப் பொறுப்புடன் விளையாட வேண்டிய ஹர்திக், ரன்களைச் சேர்க்க மிகவும் திணறினார். 23 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் 18 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

CSK vs MI Plastic Captain Kris Srikkanth Lashes Out at Hardik Pandya After MI s Humiliating Loss to CSK

இதில் 10 பந்துகள் ஒரு ரன் கூட எடுக்கப்படாத 'டாட்' பந்துகளாக அமைந்ததுதான் ஸ்ரீகாந்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது பற்றி கூறுகையில், "அந்த எண்களை பாருங்கள். 23 பந்துகளில் 18 ரன்கள். என்ன இது? அவர் ஒரு பிளாஸ்டிக் கேப்டன்." என்றார் ஸ்ரீகாந்த்.

தனது யூடியூப் சேனலில் இது குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், ஹர்திக் பாண்டியாவின் மந்தமான ஆட்டமே மும்பை அணியின் ஸ்கோர் உயரத் தடையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். ஒரு கட்டத்தில் 12.5 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 159 ரன்களை மட்டுமே எட்டியது. ஹர்திக் களத்தில் இருந்தபோது ரன் ரேட் கடுமையாகச் சரிந்ததைச் சுட்டிக்காட்டிய ஸ்ரீகாந்த், அவருக்குப் போட்டியைப் பற்றிய விழிப்புணர்வோ அல்லது சரியான திட்டமோ இல்லை என்று குற்றம் சாட்டினார்.

தொடக்கத்தில் ஒரு ஓவருக்கு 9 ரன்கள் என்ற வீதத்தில் சென்ற ரன் ரேட், ஹர்திக் களமிறங்கிய பிறகு ஓவருக்கு 3, 4, 5 ரன்கள் எனப் பாதாளத்திற்குச் சென்றது. குறிப்பாக 12 முதல் 16 ஓவர்கள் வரை மும்பை இந்தியன்ஸ் அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. மேலும், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் ஹர்திக் பாண்டியாவின் பலவீனத்தைக் கண்டறிந்து, அவரது உடலை நோக்கிப் பந்துவீசி அவரை ரன் எடுக்க விடாமல் முடக்கினர். ஜேமி ஓவர்டன் வீசிய பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஹர்திக் திணறினார்.

IPL 2026: முதல் ஓவரிலேயே பஞ்சாப் அணியை காலி செய்த சிராஜ்... குஜராத் டைட்டன்ஸ் வரலாற்றில் புதிய சாதனை

IPL 2026: முதல் ஓவரிலேயே பஞ்சாப் அணியை காலி செய்த சிராஜ்... குஜராத் டைட்டன்ஸ் வரலாற்றில் புதிய சாதனை

2026 ஐபிஎல் சீசனில் ஹர்திக்கின் ஸ்ட்ரைக் ரேட் 136.45 ஆக மட்டுமே உள்ளது. இது ஒரு பினிஷருக்கு ஏற்ற வேகம் அல்ல என விமர்சகர்கள் கூறுகின்றனர். மற்ற அணிகள் இப்போது ஹர்திக்கிற்கு லெந்த் பந்துகளை வீசாமல், ஷார்ட் பந்துகள் மூலம் அவரை எளிதாக லாக் செய்துவிடுகின்றனர் என்று ஸ்ரீகாந்த் விளக்கினார். அடுத்த போட்டியில் மும்பை அணி மே 4 அன்று லக்னோ அணியை எதிர்கொள்ள உள்ளது. பிளே ஆப் வாய்ப்பைத் தக்கவைக்க இந்தப் போட்டியில் ஹர்திக் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

Story first published: Sunday, May 3, 2026, 21:11 [IST]
Other articles published on May 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+