Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs MI: சிஎஸ்கே தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்ன ஆகும்? அதைவிட மோசமான நிலையில் மும்பை இந்தியன்ஸ்

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் பல முறை சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்று நடைபெறும் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் பிளே ஆப் வாய்ப்பு என்னவாகும்? அடுத்த சுற்றுக்கு செல்ல சிஎஸ்கே அணி இனி என்ன செய்ய வேண்டும்? விரிவாக அலசுவோம்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றதால், புள்ளிப்பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் டெல்லி அணி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள சிஎஸ்கே அணி 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் 4 இடங்களில் உள்ள பஞ்சாப், பெங்களூரு, ஐதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் 12க்கும் மேற்பட்ட புள்ளிகளுடன் வலுவாக உள்ளன. 5வது இடத்தில் உள்ள குஜராத் அணி 10 புள்ளிகளை பெற்றுள்ளது.

CSK vs MI Playoff Scenarios Chennai Super Kings Faces a Must-Win Battle Against Mumbai Indians in IPL 2026

பிளே ஆப் சுற்றுக்கு எந்த சிக்கலும் இன்றி தகுதி பெற ஒரு அணிக்கு குறைந்தது 16 புள்ளிகளாவது தேவைப்படும். சிஎஸ்கே அணிக்கு இன்னும் 6 லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இதில் குறைந்தது 5 போட்டிகளிலாவது வெற்றி பெற்றால் மட்டுமே 16 புள்ளிகளை எட்டி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க முடியும். இனி வரும் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்திருக்க வேண்டிய மிக கடுமையான நெருக்கடி ஏற்படும்.

இந்த வாழ்வா சாவா சூழ்நிலையில் தான் இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். மும்பை இந்தியன்ஸ் அணியும் 8 போட்டிகளில் 2 வெற்றி மட்டுமே பெற்று 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் தத்தளிக்கிறது. இரு அணிகளுக்கும் இது மிக முக்கியமான போட்டி என்பதால் இன்று களத்தில் அனல் பறக்கும். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றால் அந்த அணியின் பிளே ஆப் வாய்ப்பு 99 சதவீதம் முடிவுக்கு வந்துவிடும்.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் விபரம்:

  1. பஞ்சாப் கிங்ஸ்: போட்டிகள் 8, வெற்றி 6, தோல்வி 1, புள்ளிகள் 13, நெட் ரன் ரேட் 1.043

  2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: போட்டிகள் 9, வெற்றி 6, தோல்வி 3, புள்ளிகள் 12, நெட் ரன் ரேட் 1.420

  3. சன்ரைசர்ஸ் ஐதராபாத்: போட்டிகள் 9, வெற்றி 6, தோல்வி 3, புள்ளிகள் 12, நெட் ரன் ரேட் 0.832

  4. ராஜஸ்தான் ராயல்ஸ்: போட்டிகள் 10, வெற்றி 6, தோல்வி 4, புள்ளிகள் 12, நெட் ரன் ரேட் 0.510

  5. குஜராத் டைட்டன்ஸ்: போட்டிகள் 9, வெற்றி 5, தோல்வி 4, புள்ளிகள் 10, நெட் ரன் ரேட் -0.192

  6. டெல்லி கேப்பிடல்ஸ்: போட்டிகள் 9, வெற்றி 4, தோல்வி 5, புள்ளிகள் 8, நெட் ரன் ரேட் -0.895

  7. சென்னை சூப்பர் கிங்ஸ்: போட்டிகள் 8, வெற்றி 3, தோல்வி 5, புள்ளிகள் 6, நெட் ரன் ரேட் -0.121

  8. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: போட்டிகள் 8, வெற்றி 2, தோல்வி 5, புள்ளிகள் 5, நெட் ரன் ரேட் -0.751

  9. மும்பை இந்தியன்ஸ்: போட்டிகள் 8, வெற்றி 2, தோல்வி 6, புள்ளிகள் 4, நெட் ரன் ரேட் -0.784

  10. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: போட்டிகள் 8, வெற்றி 2, தோல்வி 6, புள்ளிகள் 4, நெட் ரன் ரேட் -1.106

Story first published: Saturday, May 2, 2026, 9:26 [IST]
Other articles published on May 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+