CSK vs MI: சேப்பாக்கத்தில் ஐபிஎல் எல் கிளாசிகோ.. சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றங்கள்.. மும்பை பேட்டிங்
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச உள்ளது.

2026 ஐபிஎல் தொடரின் 44வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரங்கேறுகிறது. டாஸ் வென்ற பிறகு பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளதால் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளோம், கடந்த போட்டியில் செய்த தவறுகளை திருத்தி இன்று பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என கூறினார். சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள இந்த போட்டியில் நாங்கள் கடுமையாக போராடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மறுபுறம் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், நாங்களும் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். ஆடுகளம் சற்று வறண்டு காணப்படுகிறது, இருப்பினும் எங்கள் அணி வீரர்கள் கடந்த போட்டியை போலவே மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளனர், சரியான செயல்முறையை பின்பற்றினால் வெற்றி வசப்படும் என தெரிவித்தார்.
பிட்ச் ரிப்போர்ட்டை பொறுத்தவரை, 5வது பிட்சில் கறுப்பு மண்ணில் போட்டி நடக்கிறது. ஆடுகளத்தில் சற்று ஈரப்பதம் இருப்பதால் பவர் பிளே ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல பவுன்ஸ் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி 210 ரன்கள் குவித்தால் அது சிறந்த சவாலான ஸ்கோராக இருக்கும்.
இரு அணிகளுக்குமே இந்த வெற்றி மிக முக்கியம் என்பதால் ஆடும் லெவனில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிஎஸ்கே அணியில் குர்ஜப்னீத் சிங் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோருக்கு பதிலாக ராமகிருஷ்ணா கோஷ் மற்றும் பிரசாந்த் வீர் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மும்பை அணியிலும் ரகு சர்மா என்ற புதிய வீரர் அறிமுகமாகியுள்ளார், மேலும் கிரிஷ் பகத் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மைதானத்தில் பவுண்டரி தூரம் 65 முதல் 78 மீட்டர் வரை உள்ளதால் சிக்சர்கள் அதிகம் பறக்க வாய்ப்பு உள்ளது.
இரு அணிகளின் ஆடும் லெவன் விபரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் படேல், டெவால்ட் பிரேவிஸ், சிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ணா கோஷ், பிரசாந்த் வீர், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சவுத்ரி.
மும்பை இந்தியன்ஸ்: வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன், சூர்யகுமார் யாதவ், நமன் திர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ராபின் மின்ஸ், டிரென்ட் போல்ட், கிரிஷ் பகத், ஜஸ்பிரித் பும்ரா, ஏஎம் கசன்பர்
இம்பாக்ட் வீரர்கள்:
மும்பை இந்தியன்ஸ்: ராஜ் பாவா, ரகு சர்மா, மயங்க் ராவத், ஷர்துல் தாக்கூர், அஷ்வனி குமார்
சென்னை சூப்பர் கிங்ஸ்: கார்த்திக் சர்மா, அகீல் ஹொசைன், சர்பராஸ் கான், மேத்யூ ஷார்ட், குர்ஜப்னீத் சிங்


Click it and Unblock the Notifications
