Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இம்ரான் தாஹிர் அதிரடி நீக்கம்.. யாரும் எதிர்பார்க்காத இளம் வீரரை இறக்கிய தோனி.. சிஎஸ்கே மாஸ் முடிவு

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் ரத்தத்தை பாய்ச்சி உள்ளார் தோனி.

ஆம், 41 வயதான இம்ரான் தாஹிர் அணியில் இருந்து நீக்கப்பட்டு 22 வயது இளம் வீரர் அணியில் இடம் பெற்றுள்ளார். பிராவோவும் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று வெற்றியுடன் தொடரை துவக்கியது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

முதல் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்றார். அவர் டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு உள்ளிட்ட அதிரடி வீரர்களுடன் களமிறங்கி உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணியில் சில எதிர்பார்க்காத மாற்றங்கள் நடந்து இருந்தது. சுரேஷ் ரெய்னா இல்லாத நிலையில் முரளி விஜய் அணியில் இடம் பெற்றார். அவர் துவக்க வீரராக தேர்வு செய்யப்பட்டார். பாப் டுபிளெசிஸ் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய தேர்வு செய்யப்பட்டார்.

பிராவோ, தாஹிர் நீக்கம்

பிராவோ, தாஹிர் நீக்கம்

முக்கிய ஆல் - ரவுண்டர் பிராவோ நீக்கப்பட்டுள்ளார் அவருக்கு காலில் காயம் இன்னும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. 41 வயதான சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர்-உம் சிஎஸ்கே அணியில் இடம் பெறவில்லை. அவருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளதா என்பது தெரியவில்லை.

சாம் கர்ரன் வாய்ப்பு

சாம் கர்ரன் வாய்ப்பு

அவருக்கு பதில் இளம் இங்கிலாந்து வீரரான சாம் கர்ரன் சிஎஸ்கே அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். அவர் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஆவார். அவரை தேர்வு செய்ததன் மூலம் தோனி அணியில் ஒரு இளம் வீரர் கூட இல்லை என்ற குறையை தீர்த்து வைத்துள்ளார்.

ஆடுகளம் காரணமா?

ஆடுகளம் காரணமா?

அபுதாபி ஆடுகளத்தில் நடக்கும் முதல் ஐபிஎல் போட்டி என்பதால் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் தோனி ஒரு சுழற் பந்துவீச்சாளரை குறைத்து, வேகப் பந்துவீச்சாளரான சாம் கர்ரனை அணியில் தேர்வு செய்து இருக்கலாம்.

Story first published: Saturday, September 19, 2020, 20:35 [IST]
Other articles published on Sep 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+