For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

”ஆல்ரவுண்டர்னு ஊர ஏமாத்துறான் சார் ஜடேஜா” கண்ணீர் வடிக்கும் சென்னை ரசிகர்கள்.. தெறிக்கும் மீம்ஸ்!

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் சோகத்தில் புலம்பி வருகின்றனர். அதனை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

CSK vs RR: Stunning Memes from Social Media after Punjab won by Wicket against Chennai at Chepauk

சென்னை அணியின் பேட்டிங்கின் போது 16வது ஓவர் முடிவில் களமிறங்கிய ஜடேஜா 10 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்களை மட்டுமே அடித்தார். இவரின் நிதான ஆட்டத்தால் சென்னை அணி 15 ரன்களை குறைவாக எடுத்தது. இதுவும் சிஎஸ்கே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனை சென்னை 28 படத்தில் வரும் பிரேம்ஜி அறிமுகக் காட்சியை மாற்றி, இவன் தாங்க ஜடேஜா.. ஆல் ரவுண்டர்னு சொல்லிட்டு திரிவான்.. ஏதாவது எப்பவாது ஒரு மேட்ச்ல அடிப்பான் என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்ரா சக்க ரகம்.

CSK vs RR: Stunning Memes from Social Media after Punjab won by Wicket against Chennai at Chepauk

சேப்பாக்கம் மைதானத்தில் இன்றையப் போட்டியில் தோனி களமிறங்கிய போது, மைதானத்தில் இருந்த ஸ்பீக்கரில் பாட்ஷா.. பாட்ஷா என்று பிஜிஎம் போடப்பட்டு பில்டப் ஏற்றப்பட்டது. அதற்கேற்ப தோனியும் இரு சிக்சர்களை விளாசி அசத்தினார். இதனை அப்படி ரஜினி நடந்து வரும் காட்சியையும், தோனி அன்று சிக்சர் அடித்த காட்சியையும் இன்று சிக்சர் அடித்த காட்சியையும் வைத்து உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

CSK vs RR: Stunning Memes from Social Media after Punjab won by Wicket against Chennai at Chepauk

அதேபோல் ஒன்றையப் போட்டியில் கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 4 பந்துகளில் 13 ரன்கள் விளாசினார். கடைசி இரு பந்துகளில் இரு சிக்சர்களை விளாசி அசத்தினார். இதனை அயன் படத்தில் வில்லனை கழுத்தை பிடித்து பிரபு ஒரே கையால் தூக்கிவிடுவார். அப்போது வில்லன் பிரபுவை பார்த்து, "உன் இரத்தத்துல இன்னும் சூடு குறையல தாஸ்" என்று சொல்லுவார். அதுபோல் பஞ்சாப் பவுலர்கள் தோனியை புகழ்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி.

CSK vs RR: Stunning Memes from Social Media after Punjab won by Wicket against Chennai at Chepauk

இன்றையப் போட்டியில் சென்னை அணியின் மாஜி வீரரான சாம் கரண், பஞ்சாப் அணிக்காக அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 29 ரன்களை விளாசினார். இதனை விக்ரம் படத்தில் குழந்தையிடம் கமல் பேசுவதை மாற்றி, தோனி சாம் கரணிடம் பேசுவது போல் மீம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தோனி சாம் கரணை பார்த்து, "சுட்டிக் குழந்தை சுட்டிக் குழந்தைனு எனக்கே டஃப் கொடுக்குற" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் அசத்தல்.

CSK vs RR: Stunning Memes from Social Media after Punjab won by Wicket against Chennai at Chepauk

இன்றையப் போட்டியிலும் சிஎஸ்கே அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னரான தீக்சனா ஃபீல்டிங்கின் போது ஏராளமான பந்துகளை வழக்கம் போல் கோட்டைவிட்டார். அதனை 6.2 படத்தில் வடிவேலு பேசும், "யப்பா யாராச்சும் தண்ணி விட்டு அலசி விடுங்கப்பா" என்று சொல்லுவார். அதனை அப்படியே தீக்சனாவுக்கு மாற்றி, "யப்பா யாராச்சும் இவனுக்கு நல்ல ஃபீல்டிங் கோச்சிங் கொடுங்கப்பா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் சென்னை ரசிகர்களின் குமுறல்.

CSK vs RR: Stunning Memes from Social Media after Punjab won by Wicket against Chennai at Chepauk

சென்னை அணியின் இளம் வீரர் பதிரானா கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசியும் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. பவுண்டரி கொடுக்காமல் பதிரானா பந்துவீசியது மிரட்டலாக அமைந்தது. அதனை யாரடி நீ மோகினி படத்தில் நேர்காணலில் இருந்து வெளிவரும் தனுஷிடம் ரகுவரன் சொல்வது போல், "சரி விடு.. அடுத்த நேர்காணல்-ல பாத்துக்கலாம்" என்று ஆறுதல் கூறுவார். அதனை அப்படியே மாற்றி, தோனி பதிரானாவுக்கு ஆறுதல் சொல்வது போல், "சரி விடு.. அடுத்த ஆட்டத்த்துல பாத்துக்கலாம்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் செண்டிமெண்டல் டச்.

அதேபோல் சென்னை அணியின் தோல்விக்கு ரசிகர்கள் கண்கலங்கி குழந்தை போல் அழுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம், ஒவ்வொரு சென்னை ரசிகனின் கண்ணீரை துடைக்கும் வகையில் சிரிப்பை வரவழைக்கிறது.

Story first published: Sunday, April 30, 2023, 21:15 [IST]
Other articles published on Apr 30, 2023
English summary
IPL 2023: CSK fans created best and Stunning memes after Chennai Lost against Punjab by 4 wickets
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+