Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேட்ச்சை தடுத்த கிளாசென்.. கொதித்து எழுந்த ஜடேஜா.. அப்புறம் தான் டிவிஸ்டே.. தடுத்துவிட்ட நடுவர்கள்

சென்னை : ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சென்னை அணிகள் மோதி ஆட்டத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரருமான ஜடேஜா ஐதராபாத் அணியின் கிளாசெனுடன் கோபத்தில் மோத சென்ற சம்பவம் நடைபெற்றது.

டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சேப்பாக்கம் ஆடுகளம் நேரம் செல்ல செல்ல தோய்வாக மாறிவிடும் என்பதால் குறைந்த இலக்கிலே ஹைதராபாத் அணியை சுருட்ட சிஎஸ்கே வீரர்கள் கடுமையாக போராடினர்.

CSK vs SRH - Jadeja and Henrich Klassen clashes with each other in tense moment

அப்போது ஹைதராபாத் அணியில் நட்சத்திர வீரர் மாயங் அகர்வாலும், தென்னாப்பிரிக்கா வீரர் கிளாஸ்செனும் களத்தில் நின்றனர். அப்போது ஜடேஜா வீசிய பந்தை மாயங் அகர்வால் தூக்கி அடித்தார். அதனை கேட்ச் பிடிக்க ஜடேஜா முயன்ற போது கிளாசென் எதிர்முனை நின்று கொண்டு நகராமல் நின்றார்.இதனால் ஜடேஜாவால் அந்த கேட்சை பிடிக்க முடியவில்லை. அதனால் கடுப்பான ஜடேஜா கிளாசனை கோபத்தில் திட்டி விட்டார். எனினும் அதே ஓவரில் மாயங் அகர்வால் ஜடேஜாவை ஆட்டமிழக்க வைத்தார். இதனால் ஜடேஜா மீண்டும் கிளாசினை பார்த்து திட்டினார்.

இதனால் கடுப்பான கிளாசனும் ஜடேஜாவிடம் சண்டை போட வந்தார். அப்போது நடுவர்கள் குறுக்கே புகுந்து இருவரையும் தடுத்து அனுப்பி வைத்தனர்.உடனே தோனி அங்கிருந்து வந்து ஜடேஜாவையும் சமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கிளாசன் மற்றும் ஜடேஜா இருவரும் ஐபிஎல் விதியை மீறியதால் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாசென் கேட்சை பிடிக்க விடாமல் எதிர்முனையில் அப்படி நின்றதற்கு சிஎஸ்கே வீரர்கள் நடுவர்களிடம் முறையிட்டு இருந்தால் கூட அதற்கு நடுவர்கள் அவுட்டு கொடுத்திருந்திருக்கலாம். ஆனால் சிஎஸ்கே வீரர்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதே ஓவரில் விக்கெட்டை வீழ்த்தி விட்டார்கள். சிஎஸ்கே வீரர்களின் அபார பந்துவீச்சால் ஹைதராபாத் அணி இருவது ஓவரில் 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Story first published: Friday, April 21, 2023, 22:00 [IST]
Other articles published on Apr 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+