சிஎஸ்கே மேட்ச்னா சும்மாவா?.. இணைய வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஐபிஎல் இறுதிப்போட்டி!
Recommended Video

சென்னை: சென்னை ஹைதராபாத் அணிகள் மோதும் இறுதிப்போட்டி தற்போது இணைய உலகில் புதிய சாதனை படைத்துள்ளது.
தற்போது சென்னை அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்து வருகிறது. இரண்டு அணிகளும் மிகவும் வலுவான அணி என்பதால் இந்த போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணி இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விளையாடிவருவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஹாட்ஸ்டாரில் நேரலையில் பலர் பார்த்து சாதனை படைத்துள்ளனர்.

அதிகம்
இந்த ஐபிஎல் தொடர் முழுக்க, சென்னை அணி விளையாடும் போட்டிகள் எல்லாமே மிகவும் அதிக அளவில் பார்க்கப்பட்டுள்ளது. முதல் போட்டியான மும்பைக்கு எதிரான போட்டியில் தொடங்கி கடைசியாக ஹைதராபாத்திற்கு எதிராக நடந்த போட்டி வரை எல்லாமே அதிக அளவில் பார்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

காரணம்
இதற்கு முக்கியமான காரணமும் சொல்லப்படுகிறது. பொதுவாக சென்னை விளையாடும் எல்லா போட்டியும் மிகவும் த்ரில்லாகவே இருந்தது. கடைசி நேரம் வரை வெற்றிபெறுவதும், தோற்பதும் நடந்தது. அதிக முறை கடைசி மூன்று ஓவர்களில்தான் போட்டியின் நிலை மாறியது. சென்னை வெற்றி பெறுமென்று நினைக்கும் போட்டியில் தோல்வியில் தோல்வியும், தோல்வி அடையும் என்று நினைக்கும் போட்டியில் வெற்றியும் அடைந்தது.

வரலாறு படைத்தது
சென்ற ஹைதராபத்திற்கு எதிரான பிளே ஆப் போட்டியில் சென்னை ஹைதராபாத் அணி புதிய சாதனை ஒன்றை படைத்தது. அந்த போட்டியை மொத்தம் 8.5 மில்லியன் பேர் ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்த்தனர். இதுவரை உலகில் எந்த நிகழ்வையும் இவ்வளவு பேர் இணையத்தில் நேரலையில் பார்த்தது இல்லை. இது புதிய சாதனையாக கருத்தப்பட்டது.

வரலாற்றை உடைத்தது
தற்போது சென்னையின் வரலாற்றை சென்னையே உடைத்துள்ளது. அதன்படி சென்னை ஹைதராபாத் மோதும் இன்றைய போட்டியை பாதியிலேயே 9.1 மில்லியன் பேர் வரை நேரலையில் பார்க்கிறார்கள். இதுதான் இப்போது வரை உலகில் அதிக பேர் இணையத்தில் நேரலையில் பார்த்த நிகழ்வு ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications