லிஸ்ட் வெளியானது?.. சிஎஸ்கேவில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்கள் இவர்கள்தான்.. தோனி பரபர முடிவு!
சென்னை: 2021ல் நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்பட உள்ள வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இன்னும் ஒன்றரை மாதங்களில் ஐபிஎல் ஏலம் நடக்க உள்ளது. இந்த ஏலத்திற்காக ஐபிஎல் அணிகள் இப்போதே தயார் ஆக தொடங்கிவிட்டது.
பெரிய அளவில் இந்த தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு புதிய அணிகள் இணைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் புதிய அணிகள் 2022ல்தான் இணைக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எப்படி
இந்த நிலையில் 2021ல் நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்பட உள்ள வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. சிஎஸ்கே அணி முக்கியமான வீரர்களை தங்கள் அணியில் இருந்து நீக்க உள்ளது. கோர் வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை மொத்தமாக தூக்க உள்ளது.

பட்டியல்
தற்போது வெளியாகி உள்ள உத்தேச பட்டியலின்படி சிஎஸ்கேவில் இருந்து ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, கேதார் ஜாதவ் ஆகியோர் உறுதியாக நீக்கப்பட உள்ளனர். அதேபோல் கரண் சர்மா, இம்ரான் தாஹிர் ஆகியோர் விடுவிக்கப்பட உள்ளனர்.

2021 ஏலம்
இன்னும் சில நாட்களில் இவர்கள் விடுவிக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும். இவர்களை வெளியே அனுப்புவதன் மூலம் சிஎஸ்கே அணியிடம் 12 -15 கோடி ரூபாய் மிச்சமாகும் என்று கூறப்படுகிறது. இதை வைத்து சிஎஸ்கே அணியில் புதிய வீரர்களை எடுக்கலாம் என்று அணி நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது.

இருப்பார்கள்
சிஎஸ்கே அணியில் தோனி, ஜடேஜா, பிராவோ, சாம் கரன், டு பிளசிஸ் ஆகியோர் இருப்பார்கள். ரூத்துராஜ், சாகர் , ஷரத்துல் ஆகியோர் ஏலத்தில் மீண்டும் எடுக்கப்படுவார்கள். புதிய நியூசிலாந்து வீரர்கள் பலர் சிஎஸ் கே அணியில் சேர்க்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications