Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹரி நிஷாந்த் முதல் எம் முகமது வரை.. கவனம் பெறும் இளம் தமிழக வீரர்கள்.. ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் முக்கியமான தமிழக வீரர்கள்
பலர் இடம்பெற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளிலும் தமிழக வீரர்கள்
கலக்க தொடங்கி உள்ளனர். அஸ்வின், வருண் சக்ரவர்த்தி, நடராஜன், வாஷிங்க்டன்
சுந்தர், முருகன் அஸ்வின் உள்ளிட்ட தமிழக வீரர்கள் பலர் கவனம் பெற தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் 2021 ஐபிஎல்லில் தமிழக வீரர்கள் பலர் அதிக ஏலத்திற்கு செல்ல
வாய்ப்புள்ளது. 2021 ஐபிஎல் தொடர் வரும் மே மாதம் நடக்க உள்ளது.

எங்கே

எங்கே

2020 ஐபிஎல் துபாயில் நடந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரை இந்தியாவில்

நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.இந்த ஏலத்திற்காக ஐபிஎல் அணிகள் இப்போதே

தயார் ஆக தொடங்கிவிட்டது. பிப்ரவரி 11ம் தேதி ஏலத்தை நடத்த

திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சிஎஸ்கே தற்போது தமிழக அணி வீரர்கள் மீது

கவனத்தை திருப்பி உள்ளது.

 கவனம்

கவனம்

தற்போது நடந்து வரும் சையது முஷ்டாக் அலி கோப்பையில் தமிழக அணியில் ஹரி

நிஷாந்த் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். தமிழக அணிக்கு ஓப்பனிங் வீரராக

இறங்கி வரும் இவர் அதிரடியாக 40, 70 ஒவ்வொரு போட்டியிலும் புரட்டி

எடுத்துக் கொண்டு இருக்கிறார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு வேலை

வைக்காமல் எளிதாக இவர் போட்டியை முடிக்கும் திறமை கொண்டவராக இருக்கிறார்.

லிஸ்ட்

லிஸ்ட்

அதேபோல் சிஎஸ்கே அணியின் என் ஜெகதீசன் நினைத்து பார்க்க முடியாத பார்மில்

உள்ளார். வாய்ப்பு கிடைத்த சில ஐபிஎல் போட்டிகளில் கொஞ்சம் திணறினாலும்

தற்போது சையது முஷ்டாக் கோப்பை போட்டிகளில் அடி வெளுத்து கொண்டு

இருக்கிறார். இந்த தொடரில் தமிழக அணி இதுவரை தோல்வி அடையாமல் இவர்கள் இருவருமே காரணம்.

 யாரெல்லாம்

யாரெல்லாம்

அதேபோல் இன்னொரு பக்கம் திண்டுக்கல்லை சேர்ந்த எம் முகமது மிகவும் சிறப்பாக

பவுலிங் செய்து வருகிறார். ஒவ்வொரு போட்டியில் 2-3 விக்கெட்டுகளை தவறாமல்

எடுக்கிறார். அஸ்வின் கிறிஸ்ட், முருகன் அஸ்வின் ஆகியோரும் சிறப்பாக

பவுலிங் செய்து வருகிறார்கள். இதில் முருகன் அஸ்வின் பஞ்சாப் அணியால்

ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளது.

தமிழக வீரர்கள்

தமிழக வீரர்கள்

இவர்களில் சிலர் டிஎன்பிஎல் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி கலக்கினார்கள்.

இப்படி வரிசையாக பல தொடர்களில் கலக்கி வரும் தமிழக வீரர்களை இந்த முறை குறி

வைத்து தூக்க சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது. இவர்களை பிற அணிகள் அதிக

தொகைக்கு எடுக்காது. சிஎஸ்கே அணியிடமும் அதிக அளவு பணம் இல்லை. இதனால்

குறைந்த விலையில் இவர்களை எடுக்கலாம்.

விலை என்ன

விலை என்ன

இதன் மூலம் குறைந்த விலையில் சிஎஸ்கே அணிக்கு புதிய முகங்களை கொண்டு வர

முடியும் என்று அணி நிர்வாகம் நம்புகிறது. தமிழக வீரர்கள் என்பதால் அணி

நிர்வாகமும் மிக எளிதாக இருக்கும். இவர்கள் ஏலத்தின் போது குறைந்த தொகைக்கு

கிடைக்க வாய்ப்புள்ளதால் சிஎஸ்கே இவர்களை குறி வைக்கும் என்று கூறப்படுகிறது.

Story first published: Monday, January 18, 2021, 17:57 [IST]
Other articles published on Jan 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+