இதுதான் பிளான்.. ரொம்ப ஆசைப்படாதீங்க.. புட்டுபுட்டு வைத்த கம்பீர்.. அப்படியே செய்யும் சிஎஸ்கே!
சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எப்படி செயல்படும் என்று கம்பீர் குறிப்பிட்டு இருந்தாரோ அதேபோல் அந்த அணி செயல்பட்டு வருகிறது.
2021 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி புதிய வீரர்களை ஏலம் எடுக்கும் என்று நிறைய பேர் கணித்து இருந்தனர். பெரும்பாலான வீரர்களை வெளியே அனுப்பிவிட்டு புதிய வீரர்களை சிஎஸ்கே எடுக்கும்.
இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே வாய்ப்பு கொடுக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சிஎஸ்கே அணி மீண்டும் மூத்த வீரர்களை தேடி சென்றுள்ளது.

ராபின் உத்தப்பா
சிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்று பார்த்தால் ராபின் உத்தப்பா போன்ற மூத்த வீரர்களை நேற்று வாங்கி உள்ளது. சிஎஸ்கே ரசிகர்களை இது கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. சிஎஸ்கே அணியின் திட்டம்தான் என்ன என்று அணியின் ரசிகர்கள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கம்பீர்
2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எப்படி செயல்படும் என்று கம்பீர் குறிப்பிட்டு இருந்தாரோ அதேபோல் அந்த அணி செயல்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்த கம்பீர், சிஎஸ்கே அணி இளம் வீரர்களை ஏலம் எடுக்க வாய்ப்பு இல்லை. சிஎஸ்கே அனுபவ வீரர்களைத்தான் மீண்டும் எடுக்கும்.

அனுபவம்
தோனியின் திட்டம் அதுவாகவே இருக்கும். தோனிக்கு 2021 தொடரில் கப் அடிக்க வேண்டும். அவருக்கு எதிர்காலம் குறித்து இப்போது கவலை இல்லை. இப்போதே அவருக்கு கப் அடிக்க வேண்டும் என்று விருப்பம்.

இளம் வீரர்கள்
இளம் வீரர்களை கொண்டு வந்தால் அவர்களை தயார் செய்வது கடினம். அதனால் அனுபவ வீரர்களை அணிக்குள் எடுத்து அவர்களை வைத்தே தோனி கோப்பையை வெல்ல முயற்சி செய்வார், என்று கம்பீர் குறிப்பிட்டு இருந்தார். தற்போது கம்பீர் சொன்னபடியே நடக்க தொடங்கி உள்ளது.

அதேபோல் நடக்கிறது
கம்பீரின் கூற்றுப்படியே தோனி மூத்த வீரர்களை அணியில் எடுக்க தொடங்கி உள்ளார். இந்த முறையும் சிஎஸ்கே அணி மூத்த வீரர்களை அணியில் எடுத்து அவர்களை வைத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் தோனியின் பிளானாக இருக்கும், புதிய வீரர்கள் வருவார்கள் என்று கனவு காண வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது .


Click it and Unblock the Notifications