திறக்கப்பட்ட டிரேடிங் விண்டோ.. முதல்கட்டமாக வெளியேற்றப்படும் 4 வீரர்கள்.. அதிரடியில் குதித்த சிஎஸ்கே!
சென்னை: ஐபிஎல் 2021 தொடருக்கான டிரேடிங் விண்டோ திறக்கப்பட்டுள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முக்கியமான வீரர்கள் நீக்கப்படுவார்கள் அல்லது டிரேட் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பெரிய அளவில் ஏலம் இல்லை என்றாலும் சிறிய அளவில் ஏலம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் டிரேடிங் விண்டோ தற்போது திறக்கப்பட்டுள்ளது.

டிரேடிங் விண்டோ
டிரேடிங் விண்டோ என்பது ஒரு அணி தங்கள் அணியில் இருக்கும் வீரர்களை விடுவிப்பது ஆனது. இந்த வீரர்களை மற்ற அணிகள் நினைத்தால் வாங்கிக்கொள்ள முடியும். அதேபோல் டிரேடிங் விண்டோ மூலம் மற்ற அணி வெளியேற்றும் வீரர்களை பிற அணிகள் வாங்க முடியும்.

சிஎஸ்கே
வரும் 21ம் தேதி வரை மட்டுமே டிரேடிங் விண்டோ திறக்கப்பட்டு இருக்கும். வீரர்களை வெளியேற்ற வேண்டும் என்றால் அதற்குள் வெளியேற்ற வேண்டும். இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிதான் அதிக அளவு வீரர்களை டிரேடிங் விண்டோ மூலம் வெளியேற்றும் என்று கூறுகிறார்கள்.

வெளியேற்றும்
4-5 வீரர்களை சிஎஸ்கே டிரேடிங் விண்டோ மூலம் வெளியேற்றும் என்று கூறுகிறார்கள். ஹர்பஜன், பியூஸ் சாவ்லா, கேதார் ஜாதவ் உள்ளிட்ட மூன்று வீரர்கள் முதல் கட்டமாக டிரேட் செய்யப்படுவார்கள். இன்னும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இதேபோல் டிரேட் செய்யப்பட உள்ளனர்.

மாஸ்
இதனால் வெளியேற்றப்படும் 4-5 வீரர்களுக்கு இணையாக 5 வீரர்கள் வரை சிஎஸ்கே அணியில் எடுக்க உள்ளது. ஜனவரி 21ம் தேதிக்குள் இந்த தேர்வை செய்ய வேண்டும். இதனால் சிஎஸ்கே அணியில் பல புதிய வீரர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications