Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு எதிராக அவ்வளவு பேசினார்.. அவரை எடுக்க வேண்டாம்.. கறாராக நோ சொன்ன தோனி.. பின்வாங்கிய சிஎஸ்கே?

சென்னை: சிஎஸ்கே அணியில் டெத் ஓவரில் நன்றாக பவுலிங் செய்ய கூடிய வீரர் இல்லாத காரணத்தால் கேப்டன் தோனி கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறார்..

2021 ஐபிஎல் தொடர் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஏலத்திற்கு முன்பாக 8 ஐபிஎல் அணிகளும் வெளியேற்றும், தக்க வைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த வருடம் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது. இன்னும் பல அணிகளுக்கு இடையே தொடர்ந்து டிரேடிங் நடந்து வருகிறது.

சிஎஸ்கே எப்படி

சிஎஸ்கே எப்படி

சிஎஸ்கே அணியில் பேட்டிங் கொஞ்சம் வலிமை அடைந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலும் பவுலிங் இன்னும் பிரச்சனையாக உள்ளது.சென்னை அணியில் ஸ்பின் பவுலர்கள் இல்லை. அதேபோல் நன்றாக டெத் ஓவர்களில் வீச கூடிய ஸ்பீட் பவுலர் இல்லை.

ஸ்பின்

ஸ்பின்

ஸ்பின் பவுலிங்கில் ஜடேஜா கண்டிப்பாக ஒருவர். இது போக இன்னொரு ஸ்பின் பவுலர் ஆடுவார். சிஎஸ்கே அணியில் கண்டிப்பாக பிராவோ , டு பிளசிஸ், சாம் கரன், ஓப்பனிங்கில் இன்னொரு வெளிநாட்டு வீரர் ஆடுவார்.இதனால் வேகப்பந்து வீச கூடுதலாக இன்னொரு வெளிநாட்டு பவுலரை இறக்க முடியாது.

மோசமான நிலை

மோசமான நிலை

இதன் காரணமாக சிஎஸ்கே அணி சாகர், ஷரத்துல் தாக்கூரை நம்பி இருக்க வேண்டும். இதில் சாகர் பேட்டிங் பவர் பிளேவில் பந்து வீசுவார். இதனால் கடைசியில் பவுலிங் செய்ய ஒரு இந்திய பவுலர் சிஎஸ்கே அணிக்கு தேவையாக இருக்கிறார். இதற்காக மூத்த வீரர் ஒருவரை எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டு வந்தது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

அதன்படி 35 வயது தாண்டிய வயதான ஸ்பீட் பவுலர் ஒருவரை சிஎஸ்கே குறி வைத்தது. பல வருடங்களாக ஆடாமல் ஐபிஎல் போட்டிகளுக்கு அந்த வீரர் திரும்பி வந்து இருக்கிறார். இதனால் அவரை எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தோனிக்கு இதில் விருப்பம் இல்லை என்கிறார்கள்.

விருப்பம் இல்லை

விருப்பம் இல்லை

ஆனால் கேப்டன் தோனிக்கு இவரை அணியில் எடுக்க விருப்பம் இல்லை என்கிறார்கள். அந்த மூத்த வீரர் என்னைப்பற்றி நிறைய தவறாக பேசி இருக்கிறார். அவரை அணியில் எடுக்க வேண்டாம். அவர் வந்தால் சரியாக இருக்காது என்று தோனி நினைக்கிறார்.

எப்படிப்பட்ட வீரர்

எப்படிப்பட்ட வீரர்

அதேபோல் அந்த வீரரை மற்ற அணிகளும் ஐபிஎல் போட்டியில் எடுக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். அவர் களத்தில் ஆடி பல வருடங்கள் ஆகிறது. இதனால் அவரை வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது என்று பல்வேறு ஐபிஎல் அணிகள் நினைக்கிறது .

Story first published: Monday, February 8, 2021, 13:13 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+