For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாஸ் போட்ட பிறகு.. தோனி சொன்ன "அதிர்ச்சி" தகவல் - காத்திருந்த ரசிகர்களும் பெரும் ஏமாற்றம்!

துபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரில், துபாயில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, Qualifier 1 ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை சந்திக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இப்போட்டி இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இரு அணிகளும் ரெடி

இரு அணிகளும் ரெடி

இந்த குவாலிஃபயர் போட்டிக்காக இரு அணிகளும் மிகத் தீவிரமாக தயாராகியுள்ளன. வெற்றிப் பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றிப் பெறும் அணியோடு மீண்டும் மோதும். ஸோ, எப்படிப்பார்த்தாலும், இன்றைய போட்டியில் தோற்கும் அணிக்கு இரண்டாவது வாய்ப்பு இருக்கிறது. எனினும், இன்றே வெற்றியை பதிவு செய்து, இறுதிப் போட்டிக்கு சென்றுவிட வேண்டும் என்று டெல்லி மிகத் தீவிரமாக உள்ளது. டெல்லியும் சென்னை அணிக்கு எதிராக பல வியூகங்களை வகுத்து வருகிறது.

ஹிட்டர்கள் இல்லை

ஹிட்டர்கள் இல்லை

அதில் குறிப்பானது, ஓப்பனர்களை விரைவாக அவுட் செய்வது.ஆம்! ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் ஆகியோரை, பவர் பிளேக்குள் வீழ்த்தி விட வேண்டும் என்பதே டெல்லியின் பிரதான வியூகமாகும். இருவரையும் 6 ஓவர்களுக்குள் அவுட் செய்துவிட்டாலே, சென்னை அணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிட முடியும் என்பதை டெல்லி நன்கு உணர்ந்து வைத்துள்ளது. இறுதிக் கட்டத்தில் பவுலர்களை விளாசும் அளவுக்கு ஹிட்டர்கள் இல்லை என்பதும் டெல்லி பிளஸ் பாயிண்ட் தான். ஜடேஜா தவிர, பெரியளவு சிக்ஸர்கள் அடிக்க ஆளில்லை. அல்லது ரன்கள் குவிக்க ஆளில்லை.

டெல்லி பிளேயிங் லெவன்

டெல்லி பிளேயிங் லெவன்

இந்நிலையில், டாஸ் வென்ற தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (w/சc), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேசமயம், டெல்லி அணியில் ஒரு முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அணியில், ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் (w/c), ஸ்ரேயாஸ் ஐயர், ஷிம்ரோன் ஹெட்மயர், டாம் கர்ரன், அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அணியில், ரிபல் படேலுக்கு பதிலாக டாம் கர்ரன் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ரெய்னா இல்லை

ரெய்னா இல்லை

டாஸ் வென்ற பிறகு பேசிய தோனி, "அணியில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை" என்று தெரிவித்தார். இதனால், சுரேஷ் ரெய்னா அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரெய்னா இல்லாததை விட, மிடில் ஆர்டரில் சொதப்பி வரும் உத்தப்பாவுக்கு பதில், இளம் வீரர் ஜெகதீசன் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் உத்தப்பாவுக்கே தோனி வாய்ப்பு அளித்திருப்பது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதேசமயம் டாஸ் போட்ட பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், தான் உண்மையில் பதட்டமாக இருப்பதாக கூறியுள்ளார்.

Story first published: Sunday, October 10, 2021, 19:39 [IST]
Other articles published on Oct 10, 2021
English summary
csk won the toss and elect to field qualifier 1 - சிஎஸ்கே
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+