Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிதான் புறக்கணித்தது.. நம்பிக்கை இழந்த இளம் தமிழக வீரர்..தப்பான இடத்தில் மாட்டி தவிக்கும் சிஎஸ்கே

சென்னை: சிஎஸ்கே அணியில் ஸ்பின் பவுலராக இருக்கும் இளம் தமிழக வீரர் தொடர் புறக்கணிப்புகளுக்கு ஆளாகி உள்ளார்.

2021 ஐபிஎல் தொடருக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அடிபட்ட புலியான சிஎஸ்கே இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்த தொடரை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் இருந்து முக்கியமான சில வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணி மொத்தமாக வெளியே அனுப்பிய வீரர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது.

சென்னை

சென்னை

இந்த நிலையில் சென்னை அணியில் தமிழக வீரர்கள் பலர் உள்ளனர். சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் நன்றாக ஆடிய பல தமிழக வீரர்கள் ஏற்கனவே சிஎஸ்கேவில் இடம்பெற்றுள்ளனர். பல வருடங்களாக சிஎஸ்கேவில் தொடரும் தமிழக வீரர்கள் பலர் உள்ளனர்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இப்படி சிஎஸ்கே அணியில் இளம் தமிழக வீரர்கள் பலர் இருந்தாலும் கூட யாருக்கும் பெரிய அளவில் வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. தமிழக வீரர்களில் ஜெகதீசன் மட்டுமே சிஎஸ்கே அணியில் கடந்த வருடம் ஆடுவதற்கு வாய்ப்பு பெற்றார்.

 தமிழக வீரர்

தமிழக வீரர்

சிஎஸ்கே அணியில் சில தமிழக வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு , நெட் பவுலிங்கில் மட்டும் பவுலிங் செய்து அதன்பின் வாய்ப்பை பெறாமல் ஐபிஎல் போட்டியில் அடையாளம் இழந்த கதையும் நடந்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இருக்கும் தமிழக ஸ்பின் பவுலர் மன வருத்தத்தில் இருப்பதாக தகவல் வருகிறது.

வருத்தம்

வருத்தம்

சிஎஸ்கே அணியில் ஸ்பின் பவுலராக இருக்கும் இளம் தமிழக வீரர் தொடர் புறக்கணிப்புகளுக்கு ஆளாகி உள்ளார். சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் அந்த வீரர் சிறப்பாக ஆடினார். ஆனால் அவருக்கு சிஎஸ்கே அணியில் பவுலிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை .

போன வருடம்

போன வருடம்

போன வருடம் சிஎஸ்கே அணியில் ஸ்பின் பவுலர்கள் பெரிய அளவில் ஆடவில்லை. அப்போதும் கூட இந்த தமிழக வீரருக்கு தோனி வாய்ப்பு கொடுக்கவில்லை.இதனால் சிஎஸ்கே அணியில் இருக்கும் அந்த ஸ்பின் பவுலர் தொடங்கி பல இளம் வீரர்கள் தோனி மீது கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

கோபம்

கோபம்

நாங்கள் அவ்வளவு சிறப்பாக ஆடுகிறோம். அணிக்காக உயிரை கொடுத்து சையது முஷ்டாக் கோப்பையில் ஆடுகிறோம். மற்ற அணிகளில் இளம் வீரர்கள் வாய்ப்பு பெறும்போது சிஎஸ்கேவில் மட்டும் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தோனி மீது இளம் வீரர்கள் பலர் கோபத்தில் உள்ளார் என்கிறார்கள்.

Story first published: Tuesday, February 9, 2021, 15:56 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+