ஆட்டோவில் இறங்கி குத்தாட்டம் போட்ட சென்னை அணி வீரர்கள்.. என்னா டான்ஸ்!
Recommended Video

சென்னை: சென்னை அணி வீரர்கள் விளம்பரம் ஒன்றிற்காக ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
சென்னை அணி வீரர்கள் எல்லோரும் நேற்று ஐபிஎல் போட்டி பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள். அதே சமயத்தில் ஐபிஎல் போது காட்டப்படும் சில விளம்பரங்களுக்காகவும் நடித்துக் கொடுத்தார்கள்.
இதில் ஒரு விளம்பரத்தின் வீடியோ வைரல் ஆகி உள்ளது. இதில் சென்னை வீரர்கள் மிகவும் காமெடியாக ஆடி உள்ளார்கள்.
மஞ்ச காட்டு மைனா
இந்த வீடியோவில் முரளி விஜய், பிராவோ, ஹர்பஜன் சிங் ஆகியோர் நடித்துள்ளார்கள். தமிழகத்தில் ஓடும் மஞ்சள் நிற ஆட்டோவில் வந்து இறங்கி, சென்னை அணி உடையில் நடனம் ஆடி உள்ளார்கள். இது ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவாகும்.

விளம்பரம்
தற்போது சென்னை அணியின் ஸ்பான்சராக முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் இருக்கிறது. இதன் விளம்பரம் ஒன்றிற்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் வரும் ஆடியோவில் அந்த விளம்பரம் குறித்த தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது.
சென்னை அணி
இவர் ''முரளி விஜயை சென்னை சூப்பர் கிங்ஸ் உடையில் பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது'' என்றுள்ளார்.
பார்த்து டான்ஸ் ஆடுங்க
இதில் சிலர் பல்டி அடித்து டான்ஸ் ஆடுவது போல காட்டப்பட்டு இருக்கிறது. அதனால் இவர் ''கால கைய உடச்சுக்கிறாதீங்கப்பா'' என்றுள்ளார்.


Click it and Unblock the Notifications