Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு போட்டியில் கூட வெல்லாத பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு ரூ.2 கோடி பரிசு.. கடைசி இடம் பிடிக்கும் பாக்

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் போட்டிகளை விளையாடுவதால் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என பலரும் கணித்திருந்தார்கள். ஆனால் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் முதல் சுற்றலில் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி சோகமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. இந்த தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு போட்டியில் கூட வெல்லாமல் தொடரை விட்டு வெளியேறிய ஹோம் அணி என்ற பெயரை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

Champions Trophy 2025 India cricket team Virat kohli Rohit sharma

நேற்று நடைபெற இருந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த அவ நிலை, பாகிஸ்தானுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று வங்கதேச அணியும், இந்தியா நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வியைத் தழுவி ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

இந்த நிலையில் ஒரு போட்டியில் கூட வெல்லாத பாகிஸ்தான் வங்கதேசத்திற்கு தலா 2 கோடியே 30 லட்சம் ரூபாயை ஐசிசி பரிசாக அறிவித்திருக்கிறது. அதாவது சாம்பியன் டிராபி தொடருக்கு வந்த எட்டு அணிகளுக்கும் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்திருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு மேலும் ஒரு கோடியே 22 லட்சம் கிடைக்கும்.

இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணி ஒரு போட்டியில் கூட வெல்லாமல் தலா 2 கோடியே 30 லட்சம் ரூபாயை பரிசாக பெற இருக்கிறார்கள். இதேபோன்று தென்னாபிரிக்க அணி இங்கிலாந்தை வீழ்த்தினால் வங்கதேச அணி ஆறாவது இடத்தை நிறைவு செய்யும். இதன் மூலம் வங்கதேசத்துக்கு அணிக்கு மொத்தமாக நான்கு கோடியே 28 லட்சம் ரூபாய் பரிசாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

2025 சாம்பியன் டிராபி தொடரில் மொத்தமாக 60 கோடியே 25 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 20 கோடியும் ரன்னர் அப் அணிக்கு 9 கோடியே 78 லட்சம் ரூபாயும், அரையிறுதி செல்லும் அணிக்கு நான்கு கோடியே 89 லட்சம் ரூபாயே கூடுதலாகவும், இந்த தொடரில் பங்கேற்றத்திற்காக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயில் எட்டு அணிகளுக்கும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான், வங்கதேச அணிகள் வெற்றியை பெறாமல் இவ்வளவு பெரிய தொகையை பெறுவதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Friday, February 28, 2025, 12:26 [IST]
Other articles published on Feb 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+