For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினை எல்லாம் எப்போதோ தாண்டிவிட்டார்..விராட் கோலி தான் ஆல்டைம் சிறந்த வீரர்..ஜாம்பவான்கள் பாராட்டு

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 51-வது சதத்தை அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக விராட் கோலி 82 சதம் அடித்திருக்கிறார்.

இதனால், சச்சின் டெண்டுல்கரின் 100 சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது கிரிக்கெட் வரலாற்றிலேயே சச்சின், சங்ககாரா, விராட் கோலி மட்டும் தான் 14,000 ரன்கள் மேல் அடித்திருக்கிறார்கள்.

Champions Trophy 2025 India cricket team Virat kohli Rohit sharma

இந்த நிலையில் விராட் கோலியின் இந்த ஆட்டம் குறித்து பாராட்டியுள்ள இங்கிலாந்து அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் அட்டர்டன், ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே விராட் கோலியை போல் சிறந்த சேஸர் யாருமே இல்லை. 51 சதம் அடிப்பதெல்லாம் யாராலும் நம்ப முடியாத விஷயம்.ஆனால் விராட் கோலி 51 சதம் சங்கக்காரா மட்டும்தான் இவரை விட அதிகமாக நாங்கள் அடித்திருக்கிறார்கள்.

அதுவும் சச்சினை விட 60 இன்னிங்ஸ் குறைவாகவே எடுத்துக் கொண்டு இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். இதேபோன்று சங்ககாராவை விட 90 இன்னிங்ஸ் குறைவாக இந்த மைல்களை எட்டியுள்ளார்.கிரிக்கெட்டில் விராட் கோலி சிறந்த வீரராக இருக்கின்றார். அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அவர் நன்றாக தான் விளையாடுகிறார். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட் தான் அவருக்கு மிகவும் பிடித்த போட்டியாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பிரமிக்கத்தக்க வீரராக விராட் கோலி விளங்குகிறார்.ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நான் பார்த்ததிலே மிகச் சிறந்த வீரர் என்றால் அது இவர்தான். நீங்கள் சொன்ன புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும் போது சச்சின், சங்ககாரா டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் சிறந்த வீரராக இருந்தாலும் இவர்களை விட தாண்டி விராட் கோலி புதிய உச்சத்தை தொட்டு விட்டார் என்று நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, February 25, 2025, 18:43 [IST]
Other articles published on Feb 25, 2025
English summary
CT 2025- Virat kohli is all time best odi player better than sachin says England Legend Nasser Hussain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+