10 வீரர்களுக்கு மேல் காயம்.. இந்திய அணியில் ஏற்பட்ட பெரும் பிரச்சினை.. பிசிசிஐ எடுத்த தடால் முடிவு!
மும்பை: இந்திய அணியில் 10க்கும் மேற்பட்ட நட்சத்திர வீரர்கள் காயங்கள் காரணமாக வெளியேறியதால் பிசிசிஐ சிக்கலில் உள்ளது.
Recommended Video
இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஐபிஎல், தென்னாப்பிரிக்க தொடர், இங்கிலாந்து தொடர் என அடுத்தடுத்து வரிசையாக போட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திய அணியின் தலைவலி
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் நோக்கில் தான் இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகளை கொடுத்து இந்திய அணி தயாராகி வருகிறது. ஆனால் அடுத்தடுத்து வீரர்கள் காயங்களால் அவதிப்படுகின்றனர்.

யார் அந்த வீரர்கள்
ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ஷிகர் தவான், தீபக் சஹார், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், இஷாந்த் சர்மா, அக்ஷர் படேல் என சமீபத்தில் பல வீரர்கள் காயங்களால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ( NCA ) பயிற்சி பெற்று வருகின்றனர். ஏற்கனவே அங்கு 10 முன்னணி வீரர்கள் வரை தீவிர பயிற்சியில் ஈட்டுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ முடிவு
இந்நிலையில் இதனால் பிசிசிஐ பெரும் குழப்பத்தில் உள்ளது. இந்திய அணியின் பிசியோ தெரபிஸ்டாக உள்ள நிதின் படேலை உடனடியாக பெங்களூரு கிரிக்கெட் அகாடமிக்கு தலைமை அதிகாரியாக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு சென்று விரைவில் அனைத்து வீரர்களையும் குணமாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புது பிசியோ யார்
இந்திய அணியுடன் செல்லும் புதிய பிசியோதெரபிஸ்டாக யோகேஷ் பர்மாரை நியமிக்க முடிவெடுத்துள்ளனர். இவர் ஏற்கனவே இந்திய அணியுடன் தான் பயணித்து வருகிறார். நிதின் பட்டேலுக்கு அடுத்தபடியாக உள்ள யோகேஷை அந்த பதவிக்கு நியமிக்கும் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications