For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அவர ஏன் டீமில் சேர்க்கவில்லை.. ”.. டிராவிட்டை வெளுத்து வாங்கிய பாக், சீனியர்.. இதுவும் சரி தானே!

பெர்மிங்கம்: இந்திய அணியின் தோல்விக்கு ராகுல் டிராவிட்டின் தவறான ப்ளேயிங் 11 தேர்வு தான் காரணம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

Indian Team-க்கு 8th Captain! Kohli முதல் Dhawan வரை | Aanee's Appeal | *Cricket

இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 378 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 - 2 என இங்கிலாந்து அணி சமன் செய்தது.

இந்திய அணி ஆதிக்கம்

இந்திய அணி ஆதிக்கம்

இந்த போட்டியின் முதல் மூன்று நாட்களும் இந்திய அணியின் ஆதிக்கம் தான் மேலோங்கியிருந்தது. 4வது நாள் பேட்டிங் மற்றும் 5வது நாள் பவுலிங் என இரண்டு நாட்களிலும் இந்திய அணி சொதப்பியது. இந்நிலையில் இந்தியாவின் இந்த சொதப்பலுக்கு என்ன காரணம் என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

டிராவிட் மீது குற்றச்சாட்டு

டிராவிட் மீது குற்றச்சாட்டு

இந்நிலையில் டிராவிட் மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் ஏன் சேர்க்கப்படவில்லை என்பது தான் எனக்கு புரியவில்லை. டிராவிட் எடுத்த இந்த முடிவு மிகவும் தவறானது.

காரணம் என்ன

காரணம் என்ன

ஏற்கனவே இங்கிலாந்து மைதானங்களில் விளையாடிய நல்ல அனுபவம் கொண்ட டிராவிட் அந்த தன்மையை புரிந்துக் கொண்டு அஸ்வினை விளையாட வைத்திருக்க வேண்டும். ஆட்டத்தின் 3ம் நாளுக்கு பிறகு பந்து அதிக அளவு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. நல்ல டேர்ன் இருந்தது. அஸ்வின் மட்டும் இருந்திருந்தால் இங்கிலாந்தை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

நிலைமையே வேறு

நிலைமையே வேறு

சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சவால்களை அஸ்வின் சந்தித்துள்ளார். அவர் இந்த போட்டியில் இருந்திருந்தால், நிச்சயம் சூழலை சமாளித்திருப்பார். நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காது என்று டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, July 6, 2022, 15:10 [IST]
Other articles published on Jul 6, 2022
English summary
Danish Kaneria Blames rahul dravid ( இந்திய அணியின் தோல்விக்கான காரணம் ) இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் காரணம் என டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+