Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலு.. இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து ஷாக் ஆன வெ.இண்டீஸ் வீரர்.. ஐபிஎல்-இல் இனவெறி?

அவர் சமீபத்தில் தான் "காலு" என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என தெரிந்து கொண்டதாகவும், அதை சொல்லித் தான் தன்னை சன்ரைசர்ஸ் அணியில் தான் ஆடிய போது அழைத்தார்கள் எனவும் கூறி கோபம் அடைந்துள்ளார்.

Recommended Video

ஐபிஎல்-லிலும் இனவெறி கருத்து... வெ. இண்டீஸ் வீரர் சொன்ன தகவல்

ஹிந்தியில் காலு என்றால் கருப்பர் என பொருள். தன்னை இன ரீதியாக பேசி இருக்கிறார்கள் என தற்போது அவர் அறிந்து கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

சன்ரைசர்ஸ் அணி கேப்டன்

சன்ரைசர்ஸ் அணி கேப்டன்

ஐபிஎல் தொடரில் டேரன் சமி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2014இல் கேப்டனாக இருந்துள்ளார். அப்போது காலு என அவரை அழைத்துள்ளனர். கருப்பாக இருப்பவர்களை கிண்டல் செய்யும் விதத்திலும் காலு என்ற சொல் கூறப்படும்.

உறுதியான குதிரை

உறுதியான குதிரை

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அப்போது டேரன் சமி மற்றும் இலங்கை ஆல் ரவுண்டர் திசாரா பெரேரா ஆகிய இருவரையும் அந்த வார்த்தையை சொல்லி அழைத்துள்ளனர். காலு என்றால் உறுதியான குதிரை என்பதாக சமி கருதி உள்ளார்.

உண்மையான அர்த்தம்

உண்மையான அர்த்தம்

ஜார்ஜ் பிளாயிட் படுகொலையை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து சமி குரல் கொடுத்து வரும் நிலையில் காலு என்பதன் உண்மையான அர்த்தத்தை அவர் தெரிந்து கொண்டுள்ளார். அதனால், கடும் கோபம் கொண்டுள்ளார்.

இணையதள நிகழ்ச்சி

இணையதள நிகழ்ச்சி

இத்தனை ஆண்டு காலம் டேரன் சமி காலு என்றால் தன்னை பாராட்டும் என நினைத்துக் கொண்டு இருந்தது தான் இதில் கொடுமை. தற்போது பேட்ரியாட் ஆக்ட் என்ற இணையதள நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவில் வீட்டில் கருப்பாக இருப்பவர்களை காலு என அழைப்பதை பற்றி பேசப்பட்டு இருந்தது.

கோபம்

கோபம்

அதைப் பார்த்த பின்னரே டேரன் சமி தன்னையும் அந்த அர்த்தத்தில் தான் காலு என அழைத்துள்ளனர் என புரிந்து கொண்டுள்ளார். அதன் காரணமாக தற்போது கோபம் அடைந்துள்ள அவர், இணையத்தில் அது குறித்து பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அதுதான் அதற்கு அர்த்தமா

அதுதான் அதற்கு அர்த்தமா

அந்த பதிவுகளில், "ஓ.. அதுதான் அதற்கு அர்த்தமா.. என்னையும், திசாரா பெரேராவையும் சன்ரைசர்ஸ் அணியில் ஆடிய போது இந்தியாவில் அப்படித் தான் அழைப்பார்கள். அவர்கள் என்னை உறுதியான கருப்பு மனிதன் என கூறுவதாக நினைத்தேன். இப்போது நான் கடும் கோபத்தில் உள்ளேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

குரல் கொடுக்க அழைப்பு

குரல் கொடுக்க அழைப்பு

முன்னதாக டேரன் சமி, ஐசிசி மற்றும் அனைத்து நாடுகளின் கிரிக்கெட் அமைப்புகள் ஜார்ஜ் பிளாயிட் படுகொலை பற்றி பேச வேண்டும் என்றும், கருப்பினதவருக்கு எதிராக நடந்து வரும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

விமர்சனம்

விமர்சனம்

கிரிக்கெட் அமைப்புகள் அப்படி செய்யவில்லை என்றால் அவர்களும் இந்த பிரச்சனையில் ஒரு அங்கம் என கடுமையான விமர்சனத்தையும் முன் வைத்தார். அதன் பின்னரே ஐசிசி கிரிக்கெட்டில் நிலவும் இன ஒற்றுமை குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டது.

Story first published: Sunday, June 7, 2020, 14:28 [IST]
Other articles published on Jun 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+