For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“25 என்ற பேட்டிங் ஆவரேஜ் இருக்கும் வீரரை கூட டீமை விட்டு நீக்க முடியலை”.. வேதனையை கொட்டிய டேரன் சமி

சிட்னி: வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் வீரர்களின் பேட்டிங் சராசரியைப் பற்றி அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி வேதனையுடன் பேசினார்.

வெஸ்ட் இண்டீஸ் குழும நாடுகளில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகின்றன. அங்கு டி20 தொடர்களில் விளையாடுவதற்கு மட்டுமே அனைத்து வீரர்களும் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில், உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் படுமோசமான நிலையில் இருக்கிறது.

"25 என்ற பேட்டிங் சராசரியுடன் இருந்தாலே வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துவிடலாம் என்ற நிலை உள்ளது. மேலும், 25 என்ற பேட்டிங் சராசரியுடன் இருக்கும் வீரர்களை அணியை விட்டு நீக்க முடியாத சூழ்நிலைதான் நிலவுகிறது" என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Darren Sammy Laments West Indies Test Batting Woes Ahead of Australia Series

சமீபத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து காவெம் ஹாட்ஜ் மற்றும் ஆலிக் அதான்சே ஆகிய இரண்டு பேட்ஸ்மேன்களை அணியில் இருந்து நீக்கியிருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம். அவர்கள் இருவரும் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 25 என்ற பேட்டிங் சராசரியுடன் ஆடியிருந்தனர்.

அவர்களை ஏன் நீக்கினீர்கள்? இதில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உள்ளதா? என வெஸ்ட் இண்டீஸ் ஊடகங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பின. அதற்கு பதிலளித்த டேரன் சமி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நிலையைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார்.

அப்போது அவர், "உலகின் மூன்று முன்னணி டெஸ்ட் அணிகளில் ஒவ்வொரு பேட்டிங் வரிசையிலும் ஆடும் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வரிசைப்படுத்தி, அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் நிலைமை எப்படி இருக்கிறது என ஒப்பிட்டுப் பார்த்தோம். அதில் பார்க்கும்போது, நமது அணியில் ஒருவர் கூட அதற்கு அருகே இல்லை.

மேலும், 35 என்ற பேட்டிங் சராசரி இருந்தால் அவரை அணியில் இருந்து நீக்க முடியாத சூழ்நிலையில்தான் இருக்கிறோம். இப்போது கூட நாம் 25 என்ற பேட்டிங் சராசரியுடன் இருப்பவர்களை ஏன் நீக்கினோம் என்பது பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர்கள் நமக்கு வெற்றியைப் பெற்றுத்தர மாட்டார்கள்.

மேலும், காவெம் ஹாட்ஜ் மற்றும் ஆலிக் அதான்சே ஆகியோரை நாம் பெருமைப்படுத்தி பேசுவதன் மூலம் 25 என்ற பேட்டிங் சராசரியுடன் இருக்கும் அவர்களுக்கு நாம் எந்த நன்மையும் செய்யப்போவதில்லை. அவர்களுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் இங்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்றார் டேரன் சமி.

தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்று இருக்கும் வீரர்களில் ஒருவர் மட்டுமே உள்நாட்டு வடிவத்தில் 40 என்ற பேட்டிங் சராசரியை விட அதிகம் பெற்று இருக்கிறார். கெவ்லான் ஆண்டர்சன் என்ற அந்த வீரர் 44.4 என்ற உள்நாட்டு பேட்டிங் சராசரியை வைத்துள்ளார்.

அவருக்கு அடுத்த இடத்தில் கிரெய்க் பிராத்வெயிட் இருக்கிறார். அவர் 37.9 என்ற பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். மற்றவர்கள் அனைவரும் 35 அல்லது அதற்கும் கீழேதான் பேட்டிங் சராசரி வைத்திருக்கின்றனர். இது உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் வைத்திருக்கும் பேட்டிங் சராசரியாகும்.

இதைத் தவிர்த்து, 2020ஆம் ஆண்டு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் வைத்திருக்கும் பேட்டிங் சராசரியை எடுத்துப்பார்த்தால், க்ரூமா போனர் என்ற ஒரு வீரர் மட்டுமே 38.23 என்ற பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட 33 என்ற பேட்டிங் சராசரியைத் தொடவில்லை. மேலும், மொத்தமே ஐந்து வீரர்கள் மட்டுமே 30 என்ற பேட்டிங் சராசரிக்கும் அதிகமாக ரன் சேர்த்திருக்கின்றனர். இந்த அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. இந்த நிலையில்தான், 25 என்ற பேட்டிங் சராசரியுடன் இருக்கும் இரண்டு வீரர்களை நீக்கியதற்கு அங்கு கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.

Story first published: Monday, June 23, 2025, 12:48 [IST]
Other articles published on Jun 23, 2025
English summary
Darren Sammy Laments West Indies Test Batting Woes Ahead of Australia Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+