டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார் டேரன் சமி
பார்படோஸ்: மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் டேரன் சமி டெஸ்ட் பந்தையங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

30வயதான சமி, 38 டெஸ்ட் பந்தையங்களில் விளையாடியுள்ளார். இதில் அவரது பேட்டிங் சராசரி 21.68 மட்டுமே. ஒரேயொரு செஞ்சுரி மட்டுமே அடித்துள்ளார். அதே நேரம் 84 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அந்த அணியின் கேப்டனாக 8 டெஸ்ட் பந்தையங்களில் விளையாடிய சமிக்கு பதிலாக ராம்தின் சமீபத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் ஓய்வு முடிவை அறிவித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் டி20 பந்தையங்களுக்கான வெ.இண்டீஸ் அணியின் கேப்டனாக சமி தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Saturday, May 10, 2014, 14:53 [IST]
Other articles published on May 10, 2014


Click it and Unblock the Notifications