Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏஞ்சாமி.. இதுல மூக்கு எங்க இருக்கு.. வாய் எங்க இருக்கு.. கொரோனாவுக்கு குரளி வித்தையா!

செயின்ட்லூசியா: உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தல்தான் இப்போது அதிகமாக உள்ளது. ஒவ்வொருவரும் வித்தியாசமாக இதை கையாண்டு சமாளித்து வருகின்றனர்.

அந்த வகையில் மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் டேரன் சமி புதிய விதமான மாஸ்க்குடன் வந்து அனைவரையும் கலகலக்க வைத்துள்ளார். அதிரடி வேகப்பந்து வீச்சாளரான டேரன் சமி பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினார்.

அங்குள்ள பெஷாவர் ஸால்மி என்ற அணியில் வீரராக இணைந்தார். ஆனால் பாதியிலேயே கேப்டன் பதவியிலிருந்து மாற்றப்பட்டு தலைமை பயிற்சியாளராக்கப்பட்டார்.

வித்தியாச முகமூடியுடன் சமி

வித்தியாச முகமூடியுடன் சமி

இந்தத் தொடர் தற்போது நாக்அவுட் போட்டிகள் வரை வந்து தள்ளிப் போடப்பட்டு விட்டது. காரணம் இந்த பாடாய்ப்படுத்தும் கொரோனா வைரஸ்தான். இதையடுத்து செயின்ட் லூசியா திரும்பினார் சமி. ஊருக்கு வந்தவர் தனது குசும்புத்தனத்தையும் கூடவே கூட்டி வந்தார்.. இதுதான் வேடிக்கையாகும். அந்த குசும்புத்தனத்தை அவர் வீடியோவாகவும் எடுத்து போட்டுள்ளார்.

செயின்ட் லூசியாவுக்குத் திரும்பினார்

செயின்ட் லூசியாவுக்குத் திரும்பினார்

நாக் அவுட் போட்டிகள் தள்ளிப் போடப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து கிளம்பி செயின்ட் லூசியா வந்து சேர்ந்தார் சமி. வந்தவர் படு வித்தியாசமான தோற்றத்துடன் தனது ஊருக்கு வந்தார். எப்படி தெரியுமா.. அவரது முகமே தெரியாத அளவுக்கு வித்தியாசமான மாஸ்க்குடன் காணப்பட்டார். வைரஸ் மட்டுமல்ல.. ஒரு சாதாரண கொசு கூட அவரது முகம் வழியாக ஊடுறுவ முடியாது. அந்த அளவுக்கு டைட்டான மாஸ்க் அது.

வித்தியாச முகமூடியுடன் ரிட்டர்ன்

இப்படிப்பட்ட முகமூடியுடன் செயின்ட் லூசியா விமான நிலையத்தில் அவர் தன்னைத் தானே செல்பி வீடியோ எடுத்தபடி வந்தார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமிலும் போட்டார். தலையை இங்குமங்குமாக ஆட்டியபடி என்னை எந்த வைரஸும் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டார். யாருமே ஈஸியாக அடையாளமும் காண முடியாதபடி ஒரு மாஸ்க் இது.

கொரோனாவே மோதிப் பார்

கொரோனாவே மோதிப் பார்

இந்த வீடியோவைப் போட்டு கீழே "Me vs #covid_19" என்றும் கேப்ஷன் கொடுத்து கொரோனாவை வம்பிக்கிழுத்துள்ளார் சமி. பாகிஸ்தான் பிரிமீயர் லீக் போட்டியில் பெஷாவர் அணியில் சில ஆண்டுகளாகவே ஆடி வந்தார் சமி. நடப்புத் தொடரிலும் அவர் பங்கேற்றார். ஆனால் பாதி தொடரிலேயே கேப்டன் பதவியிலிருந்து இவரை மாற்றி விட்டு வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டார். சமியை தலைமைப் பயிற்சியாளராக்கி விட்டார்கள்.

Story first published: Friday, March 20, 2020, 15:10 [IST]
Other articles published on Mar 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+