Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் சாதனை முறியடிப்பு.. டேவிட் வார்னர் செய்த மெகா சம்பவம்.. உலகக்கோப்பை தொடருக்கும் வார்னிங்!

டர்பன்: சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கிய அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் முதலிடம் பிடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். இவரது சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால் அவர் 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும். ஆனால் டி20 யுகத்தில் இனி ஒரு வீரரால் 100 சதங்கள் எல்லாம் சாத்தியமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. அந்த 100 சதங்களில் சச்சின் டெண்டுல்கர் தொடக்க வீரராக மட்டும் 45 சதங்களை விளாசி இருக்கிறார்.

David Warner breaks Sachin Tendulkar record of Most Centuries as a opening batsmen in Cricket History

தொடக்க வீரராக களமிறங்கி அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் நேற்று வரை சச்சின் டெண்டுல்கர் தான் முதலிடத்தில் இருந்தார். இந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். தொடக்க வீர்ர டிராவிஸ் ஹெட் 26 பந்துகளில் அரைசதம் அடிக்க, பவர் பிளே ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை கடந்தது. இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா அணியின் வார்னர் 52 பந்துகளில் அரைசதம் கடந்தார். பின்னர் ஹெட் 64 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் கட்டுப்பாட்டை டேவிட் வார்னர் எடுத்துக் கொண்டார்.

அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 85 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 20வது சதத்தை பதிவு செய்து ஆக்ரோஷமாக எகிறி குதித்து கொண்டாடினார். இந்த சதத்தின் மூலமாக தொடக்க வீரராக டேவிட் வார்னர் 46வது சதத்தை விளாசி இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 20 சதங்களையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 சதங்களையும், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதத்தையும் டேவிட் வார்னர் தொடக்க வீரராக விளாசி இருக்கிறார்.

இதன் மூலம் தொடக்க வீரராக அதிக சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் 93 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சரியாக உலகக்கோப்பை தொடருக்கு முன் டேவிட் வார்னர் சதம் விளாசி ஃபார்முக்கு வந்திருப்பதால், ஆஸ்திரேலிய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story first published: Saturday, September 9, 2023, 20:13 [IST]
Other articles published on Sep 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+