Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித்தை ஆங்கிலத்தில் பேச சொன்னது ஏன்? ஹிந்தியில் அவர் சொன்னது என்ன.. போட்டு உடைத்த வார்னர்!

மெல்போர்ன்: சில வருடங்களுக்கு முன் நடந்த ஆஸ்திரேலியா - இந்தியா தொடரில் ரோஹித் சர்மாவை ஆங்கிலத்தில் பேச சொன்னது ஏன் என டேவிட் வார்னர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அப்போது மிக பெரிய விவாதமாக இருந்த இந்த விஷயத்திற்கு தற்போது டேவிட் வார்னர் விளக்கம் அளித்துள்ளார். ரோஹித் இந்தியில் பேசியதையும், அதை டேவிட் வார்னர் புரிந்து கொண்டதையும் பற்றி தற்போது பேசியுள்ளார்.

2014 இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடர் விளையாட சென்றிருந்தது. கோஹ்லி தலைமையில் நடந்த இந்த தொடர் 2015 ஜனவரி வரை நடந்தது. அப்போது நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுடன் கடுமையான வாக்குவாதம் ஒன்றில் ஈடுபட்டார்.

David Warner explains why he asked Rohit to Speak English

அப்போது இந்த விஷயம் மிகவும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. மேலும் அப்போது டேவிட் வார்னர் ரோஹித்திடம் ஆங்கிலத்தில் பேசும்படி கூறியது சர்ச்சையானது. இதனால் ரோஹித்திற்கு ஆங்கிலம் தெரிவில்லை என ஆஸ்திரேலிய ஊடகங்களும், டேவிட் வார்னர் மிகவும் மொழி வெறி பிடித்த நபர் என இந்தியில் பேசியிருந்தன. அந்தத் தொடர் முடியும் வரை இந்த நிகழ்வு பெரிய கசப்பான ஒன்றாக இருந்தது.

இந்த நிலையில் அன்று ஏன் ரோஹித்தை ஆங்கிலத்தில் பேச சொன்னேன் என்பதற்கான விளக்கத்தை தற்போது டேவிட் வார்னர் அளித்துள்ளார் அதில் "அப்போது அவர் பேசியது எனக்கு புரியவில்லை. அவர் ஹிந்தியில் சாதாரண வார்த்தை சொல்லி இருக்கலாம் , ஆனால் அது ஆங்கில உச்சரிப்பில் மிகவும் தவறான வார்த்தை ஆகும். அதை நான் இப்போது சொன்னால் கூட அது கெட்ட வார்த்தையாகத் தான் பார்க்கப்படும். கேமரா அவரது உதடு அசைவுகளை பார்த்து தவறாக நினைக்க கூடாது என்றுதான் அவரை ஆங்கிலத்தில் பேச சொன்னேன்" என்றார்.

மேலும் அந்த விஷயம் குறித்து பேசிய டேவிட் வார்னர் "நான் மொழி வெறியன் இல்லை. என்னால் கண்டிப்பாக அவர் மொழியில் பேச முடியாது. ஆங்கிலத்தில் இருவருமே பேச முடியும். அவர் மொழியில் கூறிய வார்த்தைகளை இங்கு கூற விரும்பவில்லை. அது எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம்" என்று கூறினார். ஏற்கனவே டேவிட் வார்னர் பலமுறை இதே போன்ற சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 19, 2017, 13:04 [IST]
Other articles published on Oct 19, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+