Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள்.. டெஸ்ட் போட்டியை டி20 ஆக மாற்றிய வார்னர்.. வள்ளலாக மாறிய உமேஷ் யாதவ்

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் தடுமாறி வருகிறார். டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் முகமது ஷமி, சிராஜ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி வருகிறார்.

ஆட்டத்தின் முதல் அரைமணி நேரம் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, சிராஜ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். இதனால், இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

David warner hits 4 boundaries in single over as umesh yadav leaking runs

இதனையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வார்னர், மார்னஸ் லாபஸ்சேன் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். Ven Helsing திரைப்படத்தில் வானம் மேகமூட்டம் இருக்கும் போது, அட்டகாசம் செய்யும் Vampire கள், வெயில் வரும் போது எல்லாம் ஒளிந்து கொள்ளும். தற்போது லண்டன் ஓவல் மைதானமும் அப்படி தான் செயல்படுகிறது.

மேகமூட்டமாக இருக்கும் போது வேலையை காட்டும் பந்து, வெயில் வரும் போது அமைதியாகிவிடுகிறது. சிராஜ், ஷமி ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசி ஏற்படுத்திய நெருக்கடியை பயன்படுத்தி கொள்ளாமல் உமேஷ் யாதவ் வீணடித்தார். இன்னும் சொல்லப் போனால் வலை விரித்து மீன்களை பிடித்தால், அதனை அறுக்கும் வகையில் ஈடுபட்டார் உமேஷ் யாதவ்,

குறிப்பாக வெயில் கொஞ்சம் எட்டிப் பார்த்த நிலையில், பந்து ஸ்விங் ஆகவில்லை. இதனால் டேவிட் வார்னர் ஒரே ஓவரில் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரிகளை அடித்தார். இதன் மூலம் கண் இமைக்கும் நேரத்தில் ஆஸ்திரேலியாவின் ரன்களை 50 ஐ கடந்தது. தற்போது ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி இருக்கிறது. இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால், ஆஸ்திரேலியா பெரிய இலக்கை தொட்டு விடும்.

Story first published: Wednesday, June 7, 2023, 16:58 [IST]
Other articles published on Jun 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+