Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆத்தாடி ! இது அதுல? ஜடேஜாவை பங்கமாக கலாய்த்த வார்னர்.. ரன் அவுட் செய்ய முயன்ற போது கலகல.. வீடியோ

டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே டெல்லி அணிகள் மோதிய ஆட்டத்தில் கலகலப்பான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது.

இந்த போட்டியில் வெல்வதன் மூலம் 17 புள்ளிகளை பெற்று சிஎஸ்கே அணி முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியும். இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடியது.

David warner imitates jadeja by swining the bat in csk vs dc match

ருதுராஜ் 50 பந்துகளில் 79 ரன்கள் சேர்க்க, கான்வே 52 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 223 ரன்கள் எடுத்தது. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் டெல்லி விளையாடியது. ஆட்டத்தின் நான்கு புள்ளி மூன்றாவது ஓவரில் டெல்லி அணி 26 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து விளையாடுகின்ற நிலையில் வார்னரை ரன் அவுட் செய்ய முதலில் மோயின் அலி முயன்றார்.

ஆனால் பந்து ஸ்டெம்பில் படாமல் சென்றது. இதனை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் ரன் ஓட வார்னர் முயன்றார். ஆனால் ரஹானேவும் பந்தை எடுத்து அடிப்பது போல் நின்றார். அப்போது அங்கேயே வார்னர் நின்று கொண்டிருக்க ரஹானே எரிந்த பந்து ஸ்டெம்பை மீண்டும் படாமல் ஜடஜாவிடம் சென்றது.

David warner imitates jadeja by swining the bat in csk vs dc match

அப்போது ஜடேஜா மீண்டும் வார்னர் நகர்ந்தால் பந்தை எரிந்து விடலாம் என்பது போல் தயாராக இருந்தார். அப்போது ஜடேஜாவை கிண்டல் செய்யும் விதமாக பேட்டில் கத்தி சண்டை போடுவது போல் ஜடேஜா ஸ்டைலை வார்னர் செய்து காட்டினார்.இதனை பார்த்ததும் அங்கிருந்த அனைத்து வீரர்களும் சிரிக்க தொடங்கிவிட்டனர். இதனை அடுத்து பந்தை எரியாமல் ஜடேஜா சிரித்துவிட்டு சென்றார். இந்த சம்பவம் மைதானத்தில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Story first published: Saturday, May 20, 2023, 19:10 [IST]
Other articles published on May 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+