Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெகிழ வைச்ச டேவிட் வார்னர்... என்ன இப்படி செஞ்சுட்டாரு... அணியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 6 போட்டிகளில் அந்த அணி விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி கொண்டது. இந்த தோல்விகளை அடுத்து அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து அணி நிர்வாகம் நீக்கியுள்ளது.

மேலும் அடுத்தடுத்த இரு போட்டிகளில் விளையாடுவதில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். இன்றைய போட்டியில் அவர் கூல்டிரிங்க்ஸ் மற்றும் பேட் போன்றவற்றை மைதானத்திற்கு எடுத்து சென்றது நெட்டிசன்களை கோபப்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் அணி வெற்றி

ராஜஸ்தான் அணி வெற்றி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி கொண்டுள்ளது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சொதப்பலை வெளிப்படுத்தி தோல்வி கண்டுள்ளது.

கேப்டன் பதவி பறிப்பு

கேப்டன் பதவி பறிப்பு

முன்னதாக 6 போட்டிகளில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 1ல் மட்டுமே வெற்றி கொண்டது. இந்த போட்டிகளில் டேவிட் வார்னர் கேப்டனாக விளங்கினார். தொடர் தோல்விகளை அடுத்து டேவிட் வார்னரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு தற்போது கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்

நெகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நிலவிய நிலையில், கேன் வில்லியம்சன் தலைமையிலான இன்றைய போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது. இதனிடையே, இன்றைய போட்டியில் டேவிட் வார்னர் செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

கோபமடைந்த ரசிகர்கள்

கோபமடைந்த ரசிகர்கள்

அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டுமின்றி அடுத்தடுத்து இரு போட்டிகளில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்றைய போட்டியில் அவர் மற்ற வீரர்களுக்கு கூல்டிரிங்க்ஸ், பேட் போன்றவற்றை எடுத்து வந்து கொடுத்ததை பார்க்க முடிந்தது. இந்த செயல் நெட்டிசன்களை கோபத்திற்குள்ளாக்கியுளளது.

கேன் வில்லியம்சன் பாராட்டு

கேன் வில்லியம்சன் பாராட்டு

இந்நிலையில் டேவிட் வார்னர் உலக தரத்திலான வீரர் என்று கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் அணியில் இணைக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார். இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் அணியில் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, May 2, 2021, 21:10 [IST]
Other articles published on May 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+