For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ஜாம்பவான் சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவால் தான் முடியும்.. டேவிட் வார்னர் புகழாரம்!

Recommended Video

Warner says Rohit Sharma will break the lara's 400 runs record

அடிலெய்டு : டெஸ்ட் போட்டிகளில் லாராவின் 400 ரன் சாதனையை முறியடிக்க இந்திய வீரர் ரோஹித் சர்மாவால் தான் முடியும் என புகழாரம் சூட்டி இருக்கிறார் டேவிட் வார்னர்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக முச்சதம் அடித்த வார்னர், அதன் பின் பிரையன் லாராவின் சாதனையை முறியடிப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது லாராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள ஒரு வீரரை கூற வேண்டுமென்றால் அது ரோஹித் சர்மா தான் என கூறினார்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் போட்டி

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் போட்டி

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 3 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்தது.

வார்னர் முச்சதம்

வார்னர் முச்சதம்

டேவிட் வார்னர் துவக்க வீரராக களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 335 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டான் பிராட்மேன் சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை அடித்து உடைத்தார் வார்னர்.

சாதனை வாய்ப்பு

சாதனை வாய்ப்பு

335 ரன்கள் வரை எந்த சிக்கலும் இல்லாமல் அடித்த வார்னர் அதிரடியாக ஆடி வந்ததால் எப்படியும் பிரையன் லாராவின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் சாதனையான 400 ரன்களை அவர் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

டிக்ளர் செய்த கேப்டன்

டிக்ளர் செய்த கேப்டன்

ஆனால், டான் பிராட்மேன் சாதனையான 334 ரன்களை தாண்டிய நிலையில், வார்னர் 335 ரன்கள் எடுத்து இருந்த போது டிக்ளர் செய்தார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்.

லாரா சாதனை பற்றிய பேச்சு

லாரா சாதனை பற்றிய பேச்சு

சில ரசிகர்கள் டிம் பெய்ன், லாரா சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை கெடுத்து விட்டார் என இணையத்தில் புகார் கூறி வந்தனர். ஆனால். போட்டியில் மழை வரக் கூடும் என்பதாலேயே இந்த முடிவை ஆஸ்திரேலியா எடுத்ததாக சிலர் கூறி வருகின்றனர்.

வார்னர் அளித்த பதில்

வார்னர் அளித்த பதில்

இந்த நிலையில் போட்டி நாள் முடிந்த பின் பேட்டி அளித்த டேவிட் வார்னர் பிரையன் லாரா சாதனையை ஒரு வீரர் முறியடிக்கும் வீரர் ஒருவரின் பெயரை சொல்ல வேண்டும் என்றால், அது ரோஹித் சர்மா என்று நான் கூறுவேன் என பதில் அளித்தார்.

செஞ்சுரி கிங் ரோஹித் சர்மா

செஞ்சுரி கிங் ரோஹித் சர்மா

நீண்ட காலமாக டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு, பின் தற்போது தான் மிடில் ஆர்டரில் இருந்து மாறி, துவக்க வீரராக வாய்ப்பு பெற்றுள்ளார். இந்த நிலையில் வார்னர் அவரைப் பற்றி புகழ்ந்து இருக்கிறார்.

ரோஹித் அதிரடி ஆட்டம்

ரோஹித் அதிரடி ஆட்டம்

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் தான் முதன்முதலாக துவக்க வீரராக வாய்ப்பு பெற்றார் ரோஹித். அந்த ஒரே தொடரில் சதங்கள், இரட்டை சதம் அடித்து கலக்கினார் ரோஹித் சர்மா.

மூன்று இரட்டை சதம்

மூன்று இரட்டை சதம்

ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. ரஞ்சி தொடரில் முச்சதம் அடித்துள்ள ரோஹித், விரைவில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, December 1, 2019, 19:02 [IST]
Other articles published on Dec 1, 2019
English summary
David Warner says Rohit Sharma will break the Lara’s 400 run record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+