Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவுல நடக்க இருக்கற பகலிரவு டெஸ்ட் போட்டி சவாலானதுதான்...ரோகித் சர்மா

மும்பை : வரும் டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, ஒரு பகலிரவு போட்டி உள்பட 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில் முதல்முறையாக வெளிநாட்டில் இந்திய அணி விளையாடவுள்ள இந்த பகலிரவு போட்டி கண்டிப்பாக சவாலானதாக இருக்கும் என்று இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜேசன் ராய் ஆகியோரின் ஆட்டத்தை காண தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

வீட்டில் முடங்கியுள்ள ரோகித்

வீட்டில் முடங்கியுள்ள ரோகித்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனது வீட்டில் முடங்கியுள்ள இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, தன்னுடைய குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதை போக்கி வருகிறார். அவ்வப்போது, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவி மற்றும் மகள் குறித்த பதிவுகளை அவர் பகிர்ந்து வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராமின் நேரலைகளிலும், கேள்வி -பதில் செஷன்களிலும் அவர் அவ்வப்போது பங்கேற்று தன்னை பரபரப்பாக வைத்துக் கொள்கிறார்.

ரோகித் சர்மாவின் பதில்கள்

ரோகித் சர்மாவின் பதில்கள்

இதேபோன்றதொடு இன்ஸ்டாகிராமின் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரோகித் சர்மா கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரிடம் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா பங்கேற்கவுள்ள பகலிரவு போட்டி குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இந்தியா -ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்தியா -ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, வரும் டிசம்பர் 3ம் தேதி துவங்கி ஜனவரி 3ம் தேதி வரை 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதில் இரண்டாவது போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. டிசம்பர் 11ம் தேதி அடிலெய்டில் நடைபெறவுள்ள இந்த பகலிரவு போட்டி, முதல்முறையாக இந்தியா வெளிநாட்டில் விளையாடும் போட்டியாகும். கடந்த ஆண்டில் கொல்கத்தாவில் வங்கதேசத்துடன் இந்தியா தனது முதல் பகலிரவு போட்டியில் விளையாடியது நினைவிருக்கலாம்.

ரோகித் சர்மா கருத்து

ரோகித் சர்மா கருத்து

இந்நிலையில் டிசம்பர் 11ம் தேதி அடிலெய்டில் நடைபெறவுள்ள இந்த பகலிரவு போட்டிக்கு எவ்வாறு தயாராகி வருகிறீர்கள் என்று ரோகித் சர்மாவை ரசிகர் ஒரு கேள்வி கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு பதிலளித்த ரோகித் சர்மா, இந்த போட்டி கண்டிப்பாக மிகவும் சவாலானது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்தின் ஜேசன் ராய் ஆகியோரின் ஆட்டத்தை காண பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, June 16, 2020, 19:14 [IST]
Other articles published on Jun 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+