Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்பவும் துடிப்பான கேப்டன் அவர்.... தன்னோட பொறுப்பை சிறப்பா கையாள்வார்... ரெய்னா நம்பிக்கை

மும்பை :ஐபிஎல் போட்டிகள் வரும் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதிவரையில் நடைபெறவுள்ளது.

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணயின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ரிஷப் பந்த் மிகவும் துடிப்பான தலைவன் என்று சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதிய கேப்டன் ரிஷப் பந்த்

புதிய கேப்டன் ரிஷப் பந்த்

ஐபிஎல் 2021 தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு கடந்த இங்கிலாந்து தொடரின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்றைய தினம் அந்த அணி ரிஷப் பந்த்தை அணியின் புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

ரெய்னா பாராட்டு

ரெய்னா பாராட்டு

கடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான தொடர்களில் ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து அவரை தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டனாக நியமித்துள்ளது. இந்நிலையில் ரிஷப் பந்த்திற்கு சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரெய்னா நம்பிக்கை

ரெய்னா நம்பிக்கை

பந்த் சிறப்பான கேப்டனாக செயல்படுவார் என்றும் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை பெருமையுடன் எதிர்கொள்வார் என்றும் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நம்பிக்கையுடன் ரிஷப் மேற்கொள்வார் என்று டெல்லி கேபிடல்ஸ் அணயின் தலைமை கோச் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

கனவாக இருந்த பொறுப்பு

கனவாக இருந்த பொறுப்பு

இதனிடையே டெல்லி கேபிடல்ஸ் அணியில் 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது பயணம் துவங்கியதாகவும், அணியை தலைமை பொறுப்பேற்று வழிநடத்துவது தனது கனவாக இருந்தது என்றும் ரிஷப் பநத் தெரிவித்துள்ளார். அந்த கனவு தற்போது நனவாகியுள்ளதாகவும் இதையடுத்து தான் மிகவும் பெருமையாக உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, March 31, 2021, 13:54 [IST]
Other articles published on Mar 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+