Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லியின் 200வது ஐபிஎல் போட்டி... அதிரடிக்கு காத்திருக்கும் பிரித்வி, டீ வில்லியர்ஸ்!

அகமதாபாத் : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 22வது போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

Recommended Video

AB De villiers played stormy innings against Delhi capitals|Oneindia Tamil

ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மூன்றாவது இடத்தில் ஆர்சிபி அணியும் உள்ளது.

இதையடுத்து இரு அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

22வது போட்டி

22வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 22வது போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளன.

200வது ஐபிஎல் போட்டி

200வது ஐபிஎல் போட்டி

இந்த போட்டி ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடவுள்ள 200வது போட்டியாகும். இதுவரை மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மட்டுமே ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளை பூர்த்தி செய்துள்ள நிலையில் 3வது அணியாக இந்த சாதனையை டெல்லி அணி இன்றைய போட்டியில் எட்டவுள்ளது.

1000 ரன்கள் சாதனை

1000 ரன்கள் சாதனை

இதனிடையே, டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா ஐபிஎல்லில் 1000 ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் 8 ரன்களே மீதமுள்ளன. தொடரின் கடந்த போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் அவர் இன்றைய போட்டியில் அதை எட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

டீ வில்லியர்சுக்கு 22 ரன்கள் பாக்கி

டீ வில்லியர்சுக்கு 22 ரன்கள் பாக்கி

இதேபோல ஆர்சிபி வீரர் ஏபி டீ வில்லியர்சுக்கு ஐபிஎல்லில் 5,000 ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் 22 ரன்களே மீதமுள்ளது. அவரும் இன்றைய போட்டியில் இந்த சாதனையை எட்டுவார். இந்த சாதனையை ஏற்கனவே டேவிட் வார்னர் செய்துள்ள நிலையில் டீ வில்லியர்ஸ் இதை செய்யும் இரண்டாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெறுவார்.

897 ரன்கள் குவிப்பு

897 ரன்கள் குவிப்பு

இதனிடையே, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மட்டும் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி 897 ரன்களை 22 போட்டிகளில் விளையாடி எட்டியுள்ளார். இதில் 8 அரைசதங்களும் அடங்கும். எந்த ஐபிஎல் அணிக்கும் எதிராக ஐபிஎல் வீரர்கள் யாரும் இந்த சாதனையை இதுவரை எட்டியதில்லை.

Story first published: Tuesday, April 27, 2021, 20:47 [IST]
Other articles published on Apr 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+