டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
டாஸ் வென்ற பின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பேசுகையில், "நாங்கள் நன்றாக சேசிங் செய்கிறோம். இந்த ஆண்டு இந்த மைதானத்தில் இதுவே எங்களின் முதல் போட்டி. அதனால் இங்கு பிட்ச் எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியாது. நாங்கள் இதற்கு முன்பு இந்த மைதானத்தில் நடந்த போட்டிகளின் புள்ளி விவரங்களை நம்பவில்லை."

"எங்கள் திட்டத்தை முறையாக பின்பற்ற விரும்புகிறோம். எங்கள் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்கப்பட்டாலும் நாங்கள் தைரியமாக நின்று விளையாட விரும்புகிறோம். பாப்ஃ டூ பிளசிஸ் காயமடைந்து இருக்கிறார்" என்றார் அக்சர் பட்டேல்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், "நாங்கள் நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் என்ன தவறு செய்தோம் என பேசினோம். எங்கள் அணியில் அனுபவத்துக்கு எந்த குறைபாடும் இல்லை. நாங்கள் ஒரு நல்ல போட்டியை ஆடுவதற்கு வெகு தூரத்தில் இல்லை. நாங்கள் பதற்றம் அடையாமல் இருக்க வேண்டும் என முயற்சி செய்கிறோம். பதற்றம் அடைவது எந்த உதவியும் செய்யாது."
"நாங்கள் அதிக தவறுகளையும் செய்யவில்லை. இன்றைய தினம் அனைத்தும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.
அணிகள்:
டெல்லி கேபிடல்ஸ் (பிளேயிங் லெவன்): ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரெல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், மோஹித் சர்மா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
டெல்லி கேபிட்டல்ஸ் இம்பாக்ட் சப்ஸ் : தர்ஷன் நல்கண்டே, கருண் நாயர், சமீர் ரிஸ்வி, டோனோவன் ஃபெரீரா, துஷ்மந்த சமீரா
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா
மும்பை இந்தியன்ஸ் இம்பாக்ட் சப்ஸ்: கார்பின் போஷ், ராபின் மின்ஸ், அஸ்வனி குமார், ராஜ் பாவா, கர்ண் சர்மா