For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பரபர போட்டி.... தொடரோட முதல் சூப்பர் ஓவர்... சூப்பராக வெற்றி பெற்ற டெல்லி அணி... த்ரில் வெற்றி!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 20வது போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி 160 ரன்களை இலக்காக அளித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சிறப்பாக விளையாடி போட்டியை ட்ரா செய்தது. இதையடுத்து இரு அணிகளும் தொடரின் முதல் சூப்பர் ஓவரில் விளையாடின.

20வது போட்டி

20வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 20வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 160 ரன்களை எதிரணிக்கு இலக்காக கொடுத்தது.

தவான் -பிரித்வி அதிரடி

தவான் -பிரித்வி அதிரடி

துவக்க வீரர்களாக களமிறங்கி ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் அதிரடி பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். கடந்த போட்டிகளில் சிறப்பான ஓபனிங்கை தந்துள்ள இவர்கள் இருவரும் இன்றைய தினமும் சிறப்பான அதிரடி ஆட்டத்தை அளித்தனர்.

டெல்லி 3வது இடம்

டெல்லி 3வது இடம்

இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ள இளம் கேப்டன் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி பெற்றுள்ள புள்ளிகள் 6. இன்றைய போட்டி டெல்லிக்கு முக்கியமானதாக அமைந்தது.

சிறப்பான வெற்றி

சிறப்பான வெற்றி

கடந்த போட்டியில் தனது வெற்றியை துவக்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் முன்னதாக 3 போட்டிகளில் தோல்வி கண்டது. இந்நிலையில் கடந்த போட்டியின் வெற்றியை அடுத்து புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. கடந்த 2020 சீசனில் சிறப்பாக விளையாடி ப்ளேஆப் சுற்றிற்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் இந்த சீசனில் சொதப்பி வருகிறது.

சன்ரைசர்ஸ் அணியின் வீக்னஸ்

சன்ரைசர்ஸ் அணியின் வீக்னஸ்

இந்நிலையில் கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றி அந்த அணியின் நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. கடந்த போட்டியை போலவே பேர்ஸ்டோ, வில்லியம்சன் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை இன்றைய போட்டியில் அளித்தனர். வில்லியம்சன் இறுதிவரை அணியை வழிநடத்தினார்.

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர்

ஆயினும் சன்ரைசர்ஸ் அணி இறுதிவரை போராடி போட்டியை சமன் செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையில் சூப்பர் ஓவர் வைக்கப்பட்டது. முதலில் சன்ரைசர்ஸ் அணியின் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்த நிலையில் மும்பையின் அக்சர் படேல் பௌலிங் செய்தார்.

டெல்லி அணி சூப்பர் வெற்றி

டெல்லி அணி சூப்பர் வெற்றி

இவர்கள் இருவரும் இணைந்து டெல்லி அணிக்கு சூப்பர் ஓவரில் 8 ரன்களை இலக்காக கொடுத்தனர். இதையடுத்து ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பந்த் சூப்பர் ஓவரில் ஆடினர். ரஷீத் கான் பந்து வீசினார். பரபரப்பான பந்துகளுக்கிடையில் இறுதி பந்தில் 8 ரன்களை பூர்த்தி செய்து டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Sunday, April 25, 2021, 23:59 [IST]
Other articles published on Apr 25, 2021
English summary
Delhi capitals won the match by Super Over in Chennai's last match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+