Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடந்த போட்டியின் வெற்றி கொடுத்துருக்கற ஊக்கம்... இன்றைய போட்டியில வெற்றியை தொடருமா சன்ரைசர்ஸ்?

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 20வது போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன.

போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

20வது போட்டி

20வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 20வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. செனையில் நடைபெறவுள்ள இறுதி போட்டி இது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

தவான் -பிரித்வி அதிரடி

தவான் -பிரித்வி அதிரடி

துவக்க வீரர்களாக களமிறங்கி ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் ஆடி வருகின்றனர். கடந்த போட்டிகளில் சிறப்பான ஓபனிங்கை தந்துள்ள இவர்கள் இருவரும் இன்றைய தினமும் சிறப்பான அதிரடி ஆட்டத்தை துவக்கியுள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி மேலும் முன்னேற வாய்ப்புள்ளது.

3வது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

3வது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3ல்வெற்றி பெற்றுள்ள இளம் கேப்டன் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி பெற்றுள்ள புள்ளிகள் 6. ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே இரு அணிகளும் 8 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் உள்ள நிலையில், டெல்லியின் இந்த போட்டி வெற்றி அந்த அணிக்கு மாற்றத்தையும் ஏற்றத்தையும் அளிக்கும்.

சிறப்பான வெற்றி

சிறப்பான வெற்றி

கடந்த போட்டியில் தனது வெற்றியை துவக்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் முன்னதாக 3 போட்டிகளில் தோல்வி கண்டது. இந்நிலையில் கடந்த போட்டியின் வெற்றியை அடுத்து புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. கடந்த 2020 சீசனில் சிறப்பாக விளையாடி ப்ளேஆப் சுற்றிற்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் இந்த சீசனில் சொதப்பி வருகிறது.

சன்ரைசர்ஸ் அணியின் வீக்னஸ்

சன்ரைசர்ஸ் அணியின் வீக்னஸ்

இந்நிலையில் கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றி அந்த அணியின் நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. கடந்த போட்டியை போலவே பேர்ஸ்டோ, வார்னர் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை இன்றைக்கு தரும் நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கான வாய்ப்பு காணப்படும். ஆனால் சன்ரைசர்ஸ் அணியின் பௌலிங் ஆர்டர் இந்த சீசனில் சொதப்பலாகவே உள்ளது.

Story first published: Sunday, April 25, 2021, 22:58 [IST]
Other articles published on Apr 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+