Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூறாவளி காத்த போல சுழன்றடித்த டீ வில்லியர்ஸ்... அதிரடி 5,000 ரன் குவிப்பு... மிகச்சிறப்பு!

அகமதாபாத் : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

Recommended Video

AB De villiers played stormy innings against Delhi capitals|Oneindia Tamil

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 172 ரன்களை டெல்லி அணிக்கு இலக்காக கொடுத்தது.

இந்த போட்டியில் ஏபி டீ வில்லியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை கொடுத்திருந்தார்.

23வது போட்டி

23வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 23வது போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை அடித்திருந்தது.

பட்டிதார் அதிரடி ஆட்டம்

பட்டிதார் அதிரடி ஆட்டம்

இந்த போட்டியில் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் படிக்கல் முறையே 12 மற்றம் 17 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்ததாக விளையாடிய பட்டிதார் மற்றும் தொடர்ந்து விளையாடிய ஏபி டீ வில்லியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை அளித்தனர். பட்டிதார் 31 ரன்களை அடித்திருந்தார்.

75 ரன்கள்

75 ரன்கள்

தொடர்ந்து விளையாடிய ஏபி டீ வில்லியர்ஸ் 42 பந்துகளில் 75 ரன்களை குவித்தார். அவரது அதிரடியில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸ்கள் பறந்தன. பவர்ப்ளேவில் 36 ரன்களை மட்டுமே அடித்து ஆர்சிபி தவித்த நிலையில் தன்னுடைய அதிரடி மூலம் டீ வில்லியர்ஸ் அணியின் ஸ்கோரை சிறப்பாக உயர்த்தினார்.

டீ வில்லியர்ஸ் சிறப்பு

டீ வில்லியர்ஸ் சிறப்பு

குறிப்பாக இறுதி ஓவரில் 23 ரன்களை ஆர்சிபி வீரர்கள் அடித்திருந்தனர். இதில் 20 ரன்களை டீ வில்லியர்ஸ் மட்டுமே அடித்திருந்தார். இதில் 3 சிக்ஸ்கள் அடக்கம். இன்றைய போட்டியில் ஐபிஎல்லில் 5,000 ரன்களை அடித்துள்ளார். 40 சராசரியில் இந்த ரன்களை அடைந்துள்ள ஒரே வீரர் இவர்.

Story first published: Tuesday, April 27, 2021, 23:10 [IST]
Other articles published on Apr 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+