Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிவில்லியர்ஸ், கோஹ்லி அதிரடியால் வீழ்ந்தது மும்பை... 39 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி

மும்பை: ஐ.பி.எல்.லீக் போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

மும்பையில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு

டாஸ் வென்ற பெங்களூரு

டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கெய்ல் மற்றும் கோலி களம் இறங்கினர்.

சொதப்பிய கெய்ல்

சொதப்பிய கெய்ல்

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் கெய்ல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கோஹ்லி-டி வில்லியர்ஸ் அதிரடி

கோஹ்லி-டி வில்லியர்ஸ் அதிரடி

அதிரடியாக விளையாடிய கோஹ்லி-டி வில்லியர்ஸ் ஜோடி ரன்களைக் குவித்தது.

கோஹ்லி 50 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகளுடன் 82 ரன்களைக் குவித்தார்.

டி வில்லியர்ஸ் சதம்

டி வில்லியர்ஸ் சதம்

டிவில்லியர்ஸ் தொடர்ந்து பந்துகளை விளாசி சதம் அடித்தார். அவர் 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 19 பவுண்டரிகளுடன் 133 ரன்களைக் குவித்தார்.

236 ரன்கள் வெற்றி இலக்கு

236 ரன்கள் வெற்றி இலக்கு

20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 235 ரன்களைக் குவித்தது. கோஹ்லியும், டிவில்லியர்சும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நிதானம் காட்டிய பொல்லார்டு

நிதானம் காட்டிய பொல்லார்டு

தொடர்ந்து ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரர் பார்த்திவ் பட்டேல் 19 ரன்களும், அடுத்து வந்த ரோஹித் சர்மா 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பொல்லார்டு நிதானமாக விளையாடி 49 ரன்கள் சேர்த்தார்.

சிம்மன்ஸ் விளாசல்

சிம்மன்ஸ் விளாசல்

சிம்மன்ஸ் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

Story first published: Monday, May 11, 2015, 10:45 [IST]
Other articles published on May 11, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+