Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அந்த ஒருவரால் மட்டுமே இனி காப்பாற்ற முடியும்”.. இந்திய அணி பவுலிங் பிரச்சினைக்கு தீர்வு.. எப்படி?

கவுகாத்தி: இந்திய அணியில் இருந்து வந்த பெரும் குழப்பம் ஒன்றிற்கு தீர்வு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.

இதற்கான இறுதிகட்ட பயிற்சிகளில் தான் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய படை தயாராகி வருகின்றது.

பவுலிங் சொதப்பல்

பவுலிங் சொதப்பல்

இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங் அசுர பலத்தில் உள்ள போதும், பந்துவீச்சு மட்டும் சற்று சொதப்பலாகவே உள்ளது. குறிப்பாக டெத் ஓவர்களில் ஏகபோகத்திற்கு ரன்களை விட்டுக்கொடுப்பதால் எவ்வளவு ஸ்கோர் அடித்தாலும், அதனை டிஃபண்ட் செய்வது கடினமாக உள்ளது. ஆஸ்திரேலியாவுடன் 208 ரன்கள் அடித்து தோற்றதும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 221 ரன்கள் வரை விட்டுக்கொடுத்ததும் இதற்கு உதாரணமாகும்.

பும்ராவுக்கு மாற்று

பும்ராவுக்கு மாற்று

பவுலிங் படையில் புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உறுதி செய்யப்பட்டுவிட்டனர். பும்ரா காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்யும் பணி தான் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோரில் ஒருவரை சேர்ப்பதற்காக ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய முடிவு

முக்கிய முடிவு

இந்நிலையில் தீபக் சஹார் அந்த இடத்தை நிரப்ப அதிக வாய்ப்புள்ளது. காயத்தால் அவதிப்பட்டு வந்த சஹார் தென்னாப்பிரிக்க தொடரில் அட்டகாச கம்பேக் தந்துள்ளார். 2வது டி20ல் சுமார் 40 ரன்கள் வரை விட்டுக்கொடுத்த நிலையில் தீபக் சஹார் மட்டும் 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதிலும் ஒரு மெயிடன் ஓவராகும். 221 ரன்கள் வரை விரட்டிய தென்னாப்பிரிக்க அணிக்கு சஹார் வீசிய 17வது ஓவர் தான் பின்னடைவாக சென்றது.

 சிறந்த எகானமி

சிறந்த எகானமி

இதே போல முதல் டி20 போட்டியிலும் தீபக் சஹார் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார். 4 ஓவர்களை வீசி 2 விக்கெட்களை கைப்பற்றிய அவர் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக பார்க்கப்படும் தீபக் சஹார் தான் தற்போது சிறந்த எகானமியுடன் பந்துவீசுகிறார். எனவே பும்ராவுக்கு பதிலாக அவரை தான் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Story first published: Monday, October 3, 2022, 14:44 [IST]
Other articles published on Oct 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+