For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் கேரியரில் நான் செய்த தவறு.. இப்போது மாற்றி கொண்டேன்.. சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர் பேட்டி

டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தீபக்சாகர் காயத்திலிருந்து மீண்டு வந்து தற்போது சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 4 ஓவர்களில் வீசிய தீபக்சாகர் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் தனது காயம் முழுமையாக குணமடையவில்லை என்று குறிப்பிட்டுள்ள தீபக்சாகர் அதையும் பொருட்படுத்திக் கொண்டு விளையாடுகிறேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

Deepak chahar on his bowling performance vs dc in ipl 2023

இந்த நிலையில் இன்றைய ஆட்டத்திற்கு பிறகு பேசிய தீபக்சாகர் இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த முடிவை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் 160 ரன்கள் எடுத்தால் போதுமானது என்று தான் நான் நினைத்தேன். ஆனால் 220 ரன்களுக்கு மேல் நாங்கள் அடித்து சிறப்பான பணியை செய்தார்கள்.

எப்போதுமே இது போன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன் செட் ஆகிவிட்டால் அவர்கள் ரன்கள் குவிக்க கொஞ்சம் எளிதாக இருக்கும். சென்னை ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சு என்பது கொஞ்சம் சிரமமான விஷயம்.ஏனென்றால் அங்கு பயங்கரமாக வியர்வை வரும். இந்த நாள் பந்தை பிடித்து பந்து வீசுவது மிகவும் கடினமாகும்.

ஆனால் இங்கு வெப்பம் இருந்தாலும் வேர்வை அவ்வளவாக வரவில்லை. எனினும் வித்தியாசமான பந்துகளை வீச நான் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். ஒவ்வொரு சீசனிலும் நீங்கள் வித்தியாசத்தை கொண்டு வரவில்லை என்றால் ஒரு பந்துவீச்சாளராக உங்களுக்கு கஷ்டமாக இருக்கும்.

துஷார் தேஷ்பாண்டே நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளார். உங்களுக்கு பிளான் சரிவரவில்லை என்றால் பிளான் பிக்கு மாற வேண்டும். இந்த தவறை நான் என்னுடைய கேரியர் ஆரம்பத்தில் செய்து வந்தேன். இதனால் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நான் தொடர்ந்து பேசி வருகிறேன். 14 பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம் ஒரு அணியாக நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது என தீபக் சாகர் கூறியுள்ளார்.

Story first published: Saturday, May 20, 2023, 23:20 [IST]
Other articles published on May 20, 2023
English summary
Deepak chahar on his bowling performance vs dc in ipl 2023 என் கேரியரில் நான் செய்த தவறு.. இப்போது மாற்றி கொண்டேன்.. சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர் பேட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+