Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையிலிருந்து தீபக் சாஹர் விலகல்.. மாற்று வீரராக முன்னாள் சிஎஸ்கே வீரர் தேர்வு

மும்பை : டி20 உலககோப்பை தொடரிலிருந்து சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பும்ரா உலககோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், தீபக் சாஹர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங் என கலக்கினார்.

குறிப்பாக பவர்பிளேவில் தீபக் சாஹர் ஓவரை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். இதனால், ரிசர்வ் வீரராக இருந்த தீபக் சாஹரை மெயின் அணிக்கு கொண்டு செல்ல வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தீபக் சாஹர் காயம்

தீபக் சாஹர் காயம்

ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் தீபக் சாஹரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தீபக் சாஹர் பேட்டிங்கும் செய்வதால், அவர் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக இடம்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக பயிற்சி செய்த நிலையில் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது.

உறுதியாகிவிட்டது

உறுதியாகிவிட்டது

இதனையடுத்து, அந்த தொடரிலிருந்து விலகிய நிலையில், வாசிங்டன் சுந்தர் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் தீபக் சாஹர் தோல்வி அடைந்ததாக தகவல் வெளியானது, இதனையடுத்து, அவர் டி20 உலககோப்பை தொடரில் இருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

மாற்று வீரர்

மாற்று வீரர்

இந்த நிலையில், தீபக் சாஹருக்கு பதிலாக மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக, விலகி 6 மாதம் ஓய்வுக்கு பிறகு திரும்பிய தீபக் சாஹர், மீண்டும் ஒரே மாதத்தில் காயமடைந்து இருப்பது இந்திய அணி நிர்வாகத்தை எரிச்சல் அடைய செய்துள்ளது.

இந்தியாவுக்கு பின்னடைவு

இந்தியாவுக்கு பின்னடைவு

தீபக் சாஹரை சேர்த்து அணியில் பேட்டிங்கையும் பவர் பிளே ஓவர்களையும் வலுப்படுத்தலாம் என்று நினைத்த ரோகித்தின் கனவு பொய்யானது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. ஆனால் தீபக் சாஹர் இல்லாதது கிட்டத்தட்ட உறுதி. பல முன்னணி பவுலர்கள் காயம் காரணமாக விலகுவது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

Story first published: Wednesday, October 12, 2022, 18:32 [IST]
Other articles published on Oct 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+