For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு நற்செய்தி.. புகைப்படத்தில் அந்த ஒரு வீரரை கவனித்தீர்களா??. இனி கவலையே இல்லை!

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் திட்டத்தில் புதிய நற்செய்தி வந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்திய அணி புறப்பாடு

இந்திய அணி புறப்பாடு

பிசிசிஐ- ஆல் ஆதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 15 வீரர்கள் மட்டும் முதலில் ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்றனர் என்றும் பேக் அப் வீரர்கள் தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் தொடரை முடித்துக்கொண்டு செல்வார்கள் என்றும் கூறப்பட்டது. ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளதால் மொத்தம் 14 வீரர்கள் இன்று காலை புறப்பட்டனர்.

நற்செய்தி

நற்செய்தி

இந்நிலையில் இதில் ஒரு நற்செய்தியும் கிடைத்துள்ளது. அதாவது நட்சத்திர ஆல்ரவுண்டர் தீபக் ஹுடாவும் இந்திய அணியுடன் பயணித்துள்ளார். முதுகில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் நீண்ட ஓய்வில் இருந்தார். இதனால் தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அவர் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார்.

பிசிசிஐ தந்த விளக்கம்

பிசிசிஐ தந்த விளக்கம்

இதுகுறித்து பிசிசிஐ-யிடம் இருந்து வெளியாகியுள்ள தகவலில், தீபக் ஹூடாவுக்கு முதுகு வலி பிரச்சினை இருந்தது, ஆனால் ஓய்வுக்கு பின் தற்போது முழுமையாக குணமடைந்துவிட்டார். உடற்தகுதி தேர்விலும் தேர்ச்சிப் பெற்றுவிட்டார் எனக் கூறியுள்ளனர். இதனால் இந்திய அணி ரசிகர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

பும்ராவின் மாற்று

பும்ராவின் மாற்று

இது ஒருபுறம் இருக்க, வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சஹார் ஆகியோர் இதற்கான போட்டியில் இருந்து வரும் சூழலில் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரின் மூலம் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, October 6, 2022, 16:40 [IST]
Other articles published on Oct 6, 2022
English summary
Deepak Hooda Back into the Team India Squad for world cup 2022, after suffered from a Back Injury
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+