
லீக் போட்டிகள் நிறைவு
ஐபிஎல் 2020 சீசன் கடந்த மாதம் துவங்கி நடைபெற்ற நிலையில் தற்போது லீக் போட்டிகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து பிளே-ஆப்பில் 4 அணிகள் முன்னேறியுள்ளன. இவை அடுத்தடுத்து தகுதிச்சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்றுகளில் மோதி விளையாடவுள்ளன.

மும்பை -டெல்லி அணிகள் மோதல்
நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள தகுதிச்சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற மும்பை இந்தியன்ஸ் அணி தீவிரம் காட்டி வருகிறது.

6வது முறையாக பைனல்ஸ்?
இந்த தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் நிலையில் 6வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடும் அணி என்ற பெருமை அந்த அணிக்கு கிடைக்கும். மேலும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால் 5வது முறையாக கோப்பையை வெல்லும் அணி என்ற பெருமையும் கிடைக்கும்.

முதலிடத்தில் மும்பை அணி
ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது மும்பை அணி. இந்த அணியும் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும் இந்த தகுதிச்சுற்றில் மோதுகின்றன. இரு அணிகளுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்தடுத்த ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளும் கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகின்றன.

நட்சத்திர வீரர்கள்
தற்போது பிளே-ஆப் சுற்றிற்கு மும்பை அணி முன்னேறியுள்ள நிலையில் 9வது முறையாக பிளே-ஆப் சென்றுள்ள அணி என்ற பெருமையும் அந்த அணிக்கு கிடைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் பும்ரா உள்ள நிலையில், ரோகித் காயம் காரணமாக கடந்த 4 போட்டிகளில் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications