Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 வருஷத்துக்கு முன்னாடி மிஸ் ஆயிடுச்சு... இப்ப தோனிக்கு நெருக்கடி கொடுத்து தூக்கினோம்!

மும்பை : கடந்த சனிக்கிழமை ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

அந்த போட்டியில் 7 விக்கெடடுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் தான் ஆடிய இரண்டாவது பந்திலேயே கேப்டன் தோனி ஆவேஷ் பந்துவீச்சில் அவுட்டானார்.

தீவிரத்தில் சிஎஸ்கே

தீவிரத்தில் சிஎஸ்கே

ஐபிஎல் 2020 தொடரில் சிஎஸ்கே ப்ளே-ஆப் சுற்றிற்கும் தகுதிபெறாமல் வெளியேறிய நிலையில், தற்போது மிகுந்த தீவிரத்துடன் இந்த தொடரை எதிர்கொள்ள தயாராக உள்ளது. கடந்த சனிக்கிழமை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியுற்ற போதிலும் சிஎஸ்கேவின் தீவிரம் அந்த போட்டியில் வெளிப்படையாக தெரிந்தது.

அதிரடிக்கு முயன்ற தோனி

அதிரடிக்கு முயன்ற தோனி

எப்போதும் சிறிது நேரம் ஸ்டாண்ட் செய்தபின்பே தனது அதிரடியை நோக்கி செல்லும் கேப்டன் தோனியும், அந்த போட்டியில் தான் விளையாடிய இரண்டாவது பந்திலேயே அடித்து ஆட முற்பட்டு ஆவேஷ் கான் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

கடந்த போட்டியில் சாத்தியம்

கடந்த போட்டியில் சாத்தியம்

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே தோனியை அவுட்டாக்க கடைத்த சந்தர்ப்பத்தை கேட்ச் மிஸ்ஸானதால் தான் தவறவிட்டதாகவும் ஆனால் கடந்த போட்டியில் அது சாத்தியமானதாகவும் டெல்லி கேபிடல்ஸ் பௌலர் ஆவேஷ் கான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மஹியின் பெரிய விக்கெட்

மஹியின் பெரிய விக்கெட்

மஹி பாயின் பெரிய விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற தனது கனவு நனவானதாகவும் ஆவேஷ் தெரிவித்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் வலைதளத்தில் பேசியுள்ள ஆவேஷ், இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக கூறியுள்ளார். அந்த போட்டியின் தன்னுடைய பௌலிங் தனக்கு திருப்தி அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆவேஷ் திட்டம்

ஆவேஷ் திட்டம்

நீண்ட காலங்களாக எம்எஸ் தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடாத நிலையில், அவருக்கு நெருக்கடி கொடுத்து அவரது விக்கெட்டை வீழ்த்த தாங்கள் திட்டமிட்டதாகவும் அது சிறப்பான பலனை கொடுத்துள்ளதாகவும் ஆவேஷ் கான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான ஆவேஷ்

சிறப்பான ஆவேஷ்

கடந்த சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து எம்எஸ் தோனி மற்றும் பாப் டூ பிளசிஸ் என முக்கிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் ஆவேஷ் கான். இதனிடையே டூ பிளசிஸ் விளையாட ஆரம்பித்திருந்தால் அந்த போட்டியில் வெற்றி சிக்கலாக மாறியிருக்கும் என்றும் ஆவேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, April 12, 2021, 20:17 [IST]
Other articles published on Apr 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+