Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களை கூப்பிட்டு வச்சு டெல்லி கேபிடல்ஸ் செஞ்ச வேலையை பாருங்க... உற்சாகத்தில் ரசிகர்கள்!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதி வரையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி 8 ஐபிஎல் அணிகள் மற்றும் பிசிசிஐ தொடருக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் இந்த தொடருக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 9ல் துவக்கம்

ஏப்ரல் 9ல் துவக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடருக்கு அடுத்ததாக ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இநதியாவில் 6 இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையில் சென்னையில் நடைபெறவுள்ளது.

அணிகள் மும்முரம்

அணிகள் மும்முரம்

இந்த தொடருக்கான முன்னேற்பாடுகளில் பிசிசிஐ மற்றும் 8 அணிகளும் ஈடுபட்டுள்ளன. வீரர்களுக்கான ஏலமும் சிற்பபாக நடைபெற்று முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் துவங்க இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், சிஎஸ்கே உள்ளிட்ட சில அணிகள் பயிற்சிகளையும் துவக்கியுள்ளன.

ஜெர்சி அறிமுகம்

ஜெர்சி அறிமுகம்

இதனிடையே, டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த சீசனுக்கான தங்களது ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வித்தியாசமாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரசிகர்களை அழைத்து இந்த அறிமுகத்தை மேற்கொண்டுள்ளது. மேலும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், துவக்க வீரர் ஷிகர் தவான் உள்ளிட்டவர்களும் அவர்களுடன் வீடியோ காலில் பேசியுள்ளனர்.

ரசிகர்களிடையே அறிமுகம்

தங்களது ஜெர்சியை முதல் முறையாக வீரர்களிடம் காட்டுவதற்கு முன்னதாக ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளதாக அணியின் தலைவர் மற்றும் உரிமையாளரில் ஒருவரான கிரண் குமார் காந்தி தெரிவித்துள்ளார். தங்களது ஏற்ற இறக்கங்களில் துணை நிற்கும் ரசிகர்களை பெருமைப்படுத்தும்வகையில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, March 19, 2021, 15:23 [IST]
Other articles published on Mar 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+